முழு ஊரடங்கால் வீடு தேடி வரும் மளிகை பொருட்கள்… சிறப்பு ஏற்பாடு!

 

முழு ஊரடங்கால் வீடு தேடி வரும் மளிகை பொருட்கள்… சிறப்பு ஏற்பாடு!

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு வரும் ஜூன் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கில் காய்கறி, பழங்கள், மளிகைக் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு கூட அரசு அனுமதி வழங்கவில்லை. இந்த முறையும் அதற்கான அனுமதி வழங்கப்படாத நிலையில், மாவட்ட ஆட்சியர்களின் அனுமதி பெற்று வீடு வீடாக சென்று தள்ளுவண்டிகளில் விற்பனை செய்யலாம் என தெரிவித்துள்ளது.

முழு ஊரடங்கால் வீடு தேடி வரும் மளிகை பொருட்கள்… சிறப்பு ஏற்பாடு!

அதே போல, காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வீடுகளுக்கு சென்று மளிகை பொருட்களை டோர் டெலிவரி செய்யவும் அரசு அனுமதி அளித்துள்ளது. இதனிடையே, கோயம்பேடு மார்க்கெட் மற்றும் பிற மாவட்டங்களிலுள்ள மார்க்கெட்டுகளில் மொத்த விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டது. சில்லரை விற்பனைக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால், சில்லறை வணிக வியாபாரிகள் மொத்த விற்பனையாளர்களிடமிருந்து மளிகை பொருட்களை வாங்கி, மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று தள்ளு வண்டிகள் மூலம் பொருட்களை விற்பனை செய்யவுள்ளனர்.

முழு ஊரடங்கால் வீடு தேடி வரும் மளிகை பொருட்கள்… சிறப்பு ஏற்பாடு!

முழு ஊரடங்கால் மக்கள் பாதிக்காத வண்ணம் பொருட்களை வீடு வீடாக சென்று விற்பனை செய்ய அரசு அனுமதி வழங்கியிருக்கும் நிலையில், இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டுள்ளன. அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று காலை முதல் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.