பெருவுடையாருக்கு ஆயிரம் கிலோ அன்னத்தால் சிறப்பு அபிஷேகம்

பெருவுடையாருக்கு ஆயிரம் கிலோ அன்னத்தால் சிறப்பு அபிஷேகம்

ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தையொட்டி, தஞ்சை பெரியகோயிலில் உள்ள பெருவுடையாருக்கு ஆயிரம் கிலோ அன்னத்தால் சிறப்பு அன்னாபிஷேகம் நடைபெற்றது. தஞ்சாவூர் பெரியகோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தன்று பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

பெருவுடையாருக்கு ஆயிரம் கிலோ அன்னத்தால் சிறப்பு அபிஷேகம்

இதனையொட்டி, உலகமக்கள் நலம்பெற வேண்டியும், விவசாயம் செழிக்கவும் வேண்டியும் இந்த ஆண்டு, பெருவுடையாருக்கு சுமார் ஆயிரம் கிலோ அன்னம், 250 கிலோ வண்ணப்பூக்கள், 500 கிலோ காய்கறிகள் மற்றும் 50 ரூபாய் நோட்டுகளை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா எதீபாரதனை காட்டப்பட்டது.

பெருவுடையாருக்கு ஆயிரம் கிலோ அன்னத்தால் சிறப்பு அபிஷேகம்

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, நீண்ட வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்தனர். அன்னாபிஷேகம் முடிந்ததும் அலங்காரம் கலைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும், மேலும் நீர்நிலைகளில் உள்ள ஜீவராசிகள் உணவருந்தும் வகையில் அன்னம் ஆற்றில் கரைக்கப்படும்.

பெருவுடையாருக்கு ஆயிரம் கிலோ அன்னத்தால் சிறப்பு அபிஷேகம்