“நீங்க என்ன வேணும்னாலும் பேசுங்க; ஆனா மைக் தர முடியாது” – துரைமுருகனுடன் சபாநாயகர் பரபர வாக்குவாதம்!

“நீங்க என்ன வேணும்னாலும் பேசுங்க; ஆனா மைக் தர முடியாது” – துரைமுருகனுடன் சபாநாயகர் பரபர வாக்குவாதம்!

தேர்தல் நடைபெற்று ஆட்சிமாற்றம் நிகழ இன்னும் மூன்று மாதங்களே இருக்கும் நிலையில் இன்று சட்டப்பேரவையில் நடப்பாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய சபாநாயகர் தனபால் நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை அழைத்தார். அப்போது இடைமறித்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், பட்ஜெட் தாக்கலுக்கு முன் திமுகவின் கருத்தைச் சொல்லிவிடுவதாகக் கூறினார்.

“நீங்க என்ன வேணும்னாலும் பேசுங்க; ஆனா மைக் தர முடியாது” – துரைமுருகனுடன் சபாநாயகர் பரபர வாக்குவாதம்!
“நீங்க என்ன வேணும்னாலும் பேசுங்க; ஆனா மைக் தர முடியாது” – துரைமுருகனுடன் சபாநாயகர் பரபர வாக்குவாதம்!

துரைமுருகனைப் பேச அனுமதிக்க முடியாது என தனபால் மறுத்தார். அப்போது தனபாலுக்கும் துரைமுருகனுக்கும் அனல் பறக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் மாறி மாறி பேசி சண்டை போட்டுக்கொண்டனர். அவர்களின் உரையாடல் பின்வருமாறு:

துரைமுருகன்: திமுகவின் கருத்தைச் சொல்லிவிடுகிறேன்.

சபாநாயகர்: நான் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்ய பன்னீர்செல்வத்தை அழைத்துவிட்டேன்.

துரைமுருகன்: எங்கள் கருத்தைச் சொல்லிவிட்டால் அதற்கும் சேர்த்தே அவர் பதில் சொல்லட்டும்.

சபாநாயகர்: நீங்கள் என்ன சொல்லவேண்டுமோ சொல்லிவிட்டுச் சொல்லுங்கள். உங்களுக்கு பேச மைக் தரமாட்டேன். நீங்கள் பேசுவது சபைக் குறிப்பிலும் இடம்பெறாது. அவருக்கு அனுமதி அளித்துவிட்டேன். அவர் பட்ஜெட் உரையை வாசிக்க ஆரம்பிக்கிறார். நீங்கள் உட்காருங்கள்.

“நீங்க என்ன வேணும்னாலும் பேசுங்க; ஆனா மைக் தர முடியாது” – துரைமுருகனுடன் சபாநாயகர் பரபர வாக்குவாதம்!

இதையடுத்து துரைமுருகன் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் பட்ஜெட் உரையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.