எஸ்.பி.பியின் நிறைவேறாத ஆசை!

 

எஸ்.பி.பியின் நிறைவேறாத ஆசை!

கல்லூரிப்பருவத்தில் பாடகி எஸ்.ஜானிகியால் அடையாளம் காணப்பட்டு, அவரின் அறிவுறுத்தலின் பேரிலேயே சினிமாவுக்கு பாட வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

எஸ்.பி.பியின் நிறைவேறாத ஆசை!

குறுகிய காலத்திலேயே சிறந்த பின்னணிப்பாடகராக உருவெடுத்தவர் எஸ்.பி.பி. ஒரே நாளில் 19 பாடல்களை பாடும் அளவுக்கு தமிழில் பிசியாவிட்டார். ‘பாடும் நிலா பாலு’ என்று தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். 6 மணி நேரத்தில் 16 பாடல்களை பாடும் அளவுக்கு இந்தியிலும் செம பிஸி. காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 9 மணிக்குள் 21 பாடல்களை பாடும் அளவுக்கு கன்னடத்திலும் பிரபலம்.

எஸ்.பி.பியின் நிறைவேறாத ஆசை!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களை பாடியிருக்கும் எஸ்.பி.பி. அதிக முறை விமானப்பயணம் செய்தவர் என்று சொல்லும் அளவிற்கு பறந்து பறந்து சென்று பாடல்கள் பாடி பரபரப்பாக இருந்தார்.

எஸ்.பி.பியின் நிறைவேறாத ஆசை!

திரைப்படங்களில் பாடுவதோடு மட்டும் அல்லாமல், இசைநிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுப்பாடுவதால், அவர் போகாத நாடே இல்லை என்று சொல்லும் அளவிற்கு உலகம் முழுவதும் சுற்றி வந்தார். ஆனாலும் அவர் போகாத ஒரே நாடு உண்டு. அதுதான் ரஷ்யா. அந்த ஒரு நாட்டுக்க்கும் சென்றுவிட வேண்டும் என்று நினைத்திருந்தார். எப்படியாவது ரஷ்யாவுக்கு போய்விட வேண்டும் என்றும், அதற்கான வாய்ப்பு அமைய வேண்டும் என்றும் நினைத்திருந்த வேளையில், இன்று(25.9.2020)காலம் சென்றுவிட்டார்.

கடைசிவரைக்கும் ரஷ்ய மண்ணில் அவர் காலடி படாமல் போய்விட்டது.