“தேமதுரக் குரலோசை மீண்டும் ஒலித்திட மீண்டு வாருங்கள்” : எஸ்.பி.பி குறித்து ஓபிஎஸ் ட்வீட்!

 

“தேமதுரக் குரலோசை மீண்டும் ஒலித்திட மீண்டு வாருங்கள்” : எஸ்.பி.பி குறித்து ஓபிஎஸ் ட்வீட்!

50 ஆண்டு கால திரையுலக இசை பயணம் மூலம் கோடான கோடி ரசிகர்களை தன்வசம் கட்டிபோட்டு வைத்திருப்பவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். 16 இந்திய மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களை பாடியுள்ள அவருக்கு கடந்த 5ஆம் தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகினது. இதனால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ நிர்வாகம் அறிவித்தது. நேற்று சுகாதாரத்துறை விஜயபாஸ்கர் மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவக்குழுவுடன் ஆலோசித்தார். தற்போது எஸ்பிபி உடல்நிலை சீராக உள்ளதாக அவரது மகன் நேற்று சரண் கூறினார்.

“தேமதுரக் குரலோசை மீண்டும் ஒலித்திட மீண்டு வாருங்கள்” : எஸ்.பி.பி குறித்து ஓபிஎஸ் ட்வீட்!

இந்நிலையில் எஸ்.பி.பி உடல்நலம் தேறி வர துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தனது அற்புத குரல்வளத்தால் தமிழகம் மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான இசை ரசிகர்களின் இதயங்களில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்து அவர்களுக்கு மகிழ்ச்சி ஊட்டி அவர்களது அன்பை பெற்றவர் பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் கொரோனா தொற்றால் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளார் என்ற செய்தி அறிந்து எனது மனம் மிகவும் துயரம் கொள்கிறது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் அன்பைப் பெற்று அடிமைப்பெண் திரைப்படத்தில் ‘ஆயிரம் நிலவே வா’ என்ற பாடலுடன் தன்னுடைய திரையுலக பின்னணி பாடல் வரலாற்றில் திருப்புமுனை கண்டு இதுவரை ஏறுமுகம் அன்றி வேறு முகம் காணாதவர் எஸ்பிபி அவர்கள்.

இதயதெய்வம் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களை வரவேற்று ‘வெற்றி முழக்கம் எங்கும் ஒலித்தது; வெற்றி உலா வருக.. அம்மா வெற்றி உலா வருக “என்று அவர் பாடிய இனிய பாடல் ஒலிக்காத கழக மேடை இல்லை. அப்பாடல் வரிகள் தமிழ் மக்களும் இல்லை. அந்த பாடலில் தானம் தர்மம் இருபுறமும் துணையாய் வருகிறது; வானம் நீ வரும் வழியில் எல்லாம் பூமழை பொழிகிறது என்று மாண்புமிகு அம்மா அவர்களை புகழ்ந்து அவர் பாடியதை கேட்டால் மெய்சிலிர்க்கும். தனது இனிய குரலால் இசை ரசிகர்களின் இதயங்களை கட்டிப்போட்டவர் எஸ்பிபி அவர்கள். அன்பு சகோதரர் எஸ். பி. பாலசுப்ரமணியம் அவர்கள் விரைந்து குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன். தேனினும் இனிய அவரது குரல் ஓசை மீண்டும் திரைவானில் ஒலித்திடவே அவர் பூரண நலம் பெற்று மீண்டும் வருக வருக என்று அன்போடு வாழ்த்துகிறேன் ” என்று கூறியுள்ளார்.