இளகிய மனம் கொண்ட இளையநிலா!

 

இளகிய மனம் கொண்ட இளையநிலா!

எவரையும் குறைகூற விரும்பாதவர் எஸ்.பி.பி. பாடகர்களில் மட்டும் குறைகூறிவிடுவாரா என்ன? குற்றம் குறை கண்டுபிடிக்க வேண்டியிருக்குமே என்றுதான் இசை நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்பதை கூட தவிர்த்து வந்தார்.

இளகிய மனம் கொண்ட இளையநிலா!

வற்புறுத்தலின் பேரில் நடுவராக பங்கேற்க நேர்ந்தபோது கூட, ’’குறை சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள். சில திருத்தங்கள் சொல்கிறேன். அவ்வளவுதான்’’ என்று சொல்லிவிடுவார். பாடல் போட்டியில் தோற்றுப்போனவர்களிடம், ’’ நல்லா பாடுறீங்க. இன்னைக்கு உங்களுக்கு தொண்டை கொஞ்சம் சரியில்லை. ஜெயித்தவருக்கு கொஞ்சம் தொண்டை நல்லாயிருக்கு. இன்றைக்கு உங்களால் சரியாக பாட முடியாமல் போய்விட்டது. அதற்காக என்றைக்கும் உங்களால் சரியாக பாட முடியாமல் போகாது’’ என்று தேற்றுவார். அந்த அளவுக்கு அடுத்தவர் மனம் நோகக்கூடாது என்பதில் கவனமாக இருந்து வந்தார்.

இளகிய மனம் கொண்ட இளையநிலா!

பாடல் போட்டியாளர்களிடம், அது சரியில்லை இது சரியில்லை என்று ரொம்ப குறை சொல்லும் நடுவர்களையும் பார்த்து, ‘போதும்மா..’என்று சொல்லிவிடுவார்.

குற்ற உணர்வில் இருக்கும் பாடகர்களிடம், நாங்க மட்டும் ஒழுங்கா பாடிவிடுறோமா என்ன? பாடும்போடு எத்தனை டேக் எடுத்து பாடுறோம் தெரியுமா? பாடும்போது நாங்க செய்யுற தப்பு எல்லாம் உங்களுக்கு தெரியாது. அது எல்லாம் சரி செய்யப்பட்டு வர்றதத்தான் நீங்க கேட்டுவிட்டு, ஆஹா நல்லா இருக்குதுன்னு சொல்லுறீங்க. ஆனா, நீங்க ஒரே டேக்கில் இவ்வளவு அழகாக பாடுறீங்க. உங்களை எல்லாம் சினிமாவில் பாட வச்சா எங்களைவிட கலக்கிடுவீங்க என்று சொல்லி தேற்றுவார்.

இளகிய மனம் கொண்ட இளையநிலா!

இசைப்போட்டி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் போதெல்லாம், தான் பங்கேற்கும் அன்றைய தினம் எவரையும் எலிமினேட் செய்யக்கூடாது என்று கண்டிசன் போட்டுவிட்டுத்தான் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவே வருவார். கண்டிசன் போட்டுவிட்டு வந்ததை நிகழ்ச்சியிலேயே சொல்லியும் விடுவார்
இளகிய மனம் கொண்ட இளையநிலா எஸ்.பி. பி.

  • கதிரவன்