மருத்துவமனை பில்லை கட்ட வெங்கய்ய நாயுடுவின் உதவியை கோரினோமா? எஸ்பி சரண் விளக்கம்

 

மருத்துவமனை பில்லை கட்ட வெங்கய்ய நாயுடுவின் உதவியை கோரினோமா? எஸ்பி சரண் விளக்கம்

50 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகர் எஸ்.பி.பி கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவரது உடல் கடந்த சனிக்கிழமை தாமரைப்பாக்கத்தில் இருக்கும் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. எஸ்பிபியின் மறைவு ரசிகர்களிடையே மீளாத்துயரை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அவரது மருத்துவக் கட்டணம் தொடர்பாக இணையத்தளத்தில் வதந்திகள் பரவியது.

அதாவது மருத்துவத்திற்கு அதிகப்படியான கட்டணம் கேட்டதாகவும், அதனை எஸ்பிபியின் குடும்பத்தினரால் கட்ட முடியாத சூழல் ஏற்பட்டு வெங்கய்யா நாயுடு உதவி செய்ததாக கூறப்பட்டது. இதனை அறிந்த எஸ்பிபி மகன் சரண், வீடியோ ஒன்றை வெளியிட்டு அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

மருத்துவமனை பில்லை கட்ட வெங்கய்ய நாயுடுவின் உதவியை கோரினோமா? எஸ்பி சரண் விளக்கம்

அந்த வீடியோவில், “நான் சில விஷயங்களை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். அப்பாவை கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதித்தோம், கடந்த வெள்ளிக்கிழமை அதாவது செப்.24 ஆம் தேதி உயிரிழந்தார். நாங்கள் எம்ஜிஎம் மருத்துவமனை பில்லை கட்டுவதற்காக அரசிடம் உதவி கோரி இருந்தோம். அவர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசியிருந்தார்கள் என்பது போன்ற வதந்திகள் பரவிவருகின்றன. அதேபோல் நாங்கள் வெங்கய்யா நாயுடுவிடமும் கேட்கவில்லை, பில் தொகையை முழுமையாக எம்ஜிஎம் மருத்துவமனைக்கு நாங்கள் இன்னும் முழுமையாக கட்டவில்லை என்றும் புரளிகள் வெளிவருகின்றன. இவை எல்லாமே புரளிதான். ஏன் சில விஷமிகள் இப்படி செய்கிறார்கள் என தெரியவில்லை. மேலும் மருத்துவ செலவிற்கான கட்டனம் கடடுவதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இருந்ததில்லை. இதுபோன்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே நாங்களும், எம்ஜிஎமும் இணைந்து தான் பிரஸ் ரிலீசை வெளியிட்டோம். இதுபோன்று ஒரு சிலர் வதந்தி பரப்புவது பிறரையும் பாதிக்கிறது.

எஸ்.பி.பியின் அடக்கத்திற்கு அரசு தரப்பில் இருந்து முழு ஒத்துழைப்பு தந்ததனர். அதற்காக நன்றி செலுத்துவதாகவும் கூறினார். எம்ஜிஎம் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியிடங்கள் மிகவும் அப்பாவை மிகவும் நன்றாக கவனித்தனர். எம்ஜிஎமில் எவ்வளவு பில் வந்தது என்பதை விரைவில் வெளியிடுவேன். அதுவரை தயவு செய்து வதந்திகளை பரப்பாதீர்கள், இது மிகவும் மனதை கஷ்டப்படுத்துகிறது. கடவுள் ஆசிர்வதிக்கட்டும். எம்ஜிஎம் சென்னையிலேயே மிகவும் நல்ல மருத்துவமனை. நன்றி ” எனக் கூறினார்.