எஸ்.பி.பியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்- மருத்துவமனை நிர்வாகம்

 

எஸ்.பி.பியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்- மருத்துவமனை நிர்வாகம்

பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் திடீர் பின்னடைவு என தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் கடந்த மாதம் 5 ஆம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எஸ்பிபி உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அவரது திரையுலக நண்பர்களும், ரசிகர்களும் அவருக்காக பிரார்த்தனை செய்தனர். அதே நேரம் மருத்துவர்களும் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தது. அதன் எதிரொலியாக எஸ்பிபி தற்போது கொரோனாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தார். மயக்க நிலையில் இருந்து பூரணமாக மீண்ட எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவதற்காக அவர் ஆவலோடு காத்திருப்பதாகவும் அவரது மகன் சரண் தெரிவித்திருந்தார்.

எஸ்.பி.பியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்- மருத்துவமனை நிர்வாகம்

இந்நிலையில் பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. எஸ்பிபி குணமடைய இந்த நேரத்தில் அனைவரும் பிரார்த்திக்குமாறு இசையமைப்பாளர் தமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எஸ்.பி.பியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்- மருத்துவமனை நிர்வாகம்

எஸ்.பி.பி உடல்நிலையை மருத்துவ நிபுணர் குழு கண்காணித்து வருவதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் எஸ்.பி.பியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.