எஸ்.பி.பி உடல்நிலை: குடும்ப உறவினர்களை வர சொல்லிவிடுங்கள்- மருத்துவர்கள்

 

எஸ்.பி.பி உடல்நிலை: குடும்ப உறவினர்களை வர சொல்லிவிடுங்கள்- மருத்துவர்கள்

பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் சற்றுமுன் அறிக்கை வெளியிட்டது. அவரது உடல்நிலையை மருத்துவ நிபுணர் குழு கண்காணித்து வருவதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் எஸ்.பி.பியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எஸ்.பி.பி உடல்நிலை: குடும்ப உறவினர்களை வர சொல்லிவிடுங்கள்- மருத்துவர்கள்

எஸ்பிபி உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டதையடுத்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். தொடர்ந்து தென்னிந்திய திரைப்பட வர்த்தக தலைவர் பிரசாத், மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார். தொடர்ந்து எஸ்பிபியின் உடல்நிலை மோசமடைந்து வருவதால் அவரது குடும்ப உறவினர்களை வரச் சொல்லும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.