• July
    17
    Wednesday

Main Area

Main



தண்ணீர் கொடுப்பவர்களுக்கே தண்ணி காட்டும் எஸ்.பி.வேலுமணியின் கோர முகம்... அதிர வைக்கும் அரசியல் பின்னணி..!

எஸ்.பி.வேலுமணி
எஸ்.பி.வேலுமணி
Loading...

தமிழகம் தண்ணீர் தாகத்தால் தலை விரித்தாடுகிறது. இந்நிலையில் கேரள அரசு 20 லட்சம் லிட்டர் தண்ணீரை திருவணந்தபுரத்தில் இருந்து ரயிலில் அனுப்புவதாக  அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் அதனை ஏற்க மறுத்து விட்டது தமிழக அரசு. தண்ணீர்

 இதற்கு பின்னணியில் தமிழக அரசை தாஜா செய்வதற்காகவே கேரள அரசு இந்தக் காரியத்தில் இறங்கியதாகக் கூறப்படுகிறது. தொண்டாமுத்தூர் தொகுதியை சேர்ந்தவர் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.   இவரது தொகுதிகளிலும், சுற்று வட்டாரப்பகுதிகளிலும் கேரள அரசு செய்து வரும் அட்டூழியத்தை மறைக்கவே அம்மாநில முதல்வர் தாமாக முன் வந்து தண்ணீர் தர முன் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வேலுமணி

அதாவது, தமிழக-கேரள எல்லையான பொள்ளாச்சி கொழிஞ்சாம்பாறை வழியாக கேரளாவில் இருந்து நடு இரவில் மருத்துவ கழிவுகள், கோழி கழிவுகள் லாரி, லாரியாக எல்லை தாண்டி பொள்ளாச்சி பகுதிக்கு வருகின்றன. 

இங்குள்ள தென்னந்தோப்பு மற்றும் சாலையோரங்களில் இந்த கழிவுகளை கொட்டிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுகின்றனர். இதனால், பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் தாக்கம் அதிகரிக்கிறது. ஏற்கனவே, பன்றி காய்ச்சல், பறவை காய்ச்சல், நிபா வைரஸ் தாக்குதல் என பல தொற்றுநோய், கேரளாவில் இருந்துதான் தமிழகத்துக்கு வருகின்றன. 

இனி மருத்துவ கழிவு, கோழிக்கழிவு லாரிகள் எல்லை தாண்டி வந்தால், அவற்றை சிறை மட்டுமே பிடிக்கவேண்டும். அதன் மீது வழக்கு தொடுக்கக்கூடாது, சிறைபிடித்து அப்படியே மாதக்கணக்கில் நிறுத்திவிட்டால் லாரி துருப்பிடித்து வீணாகிவிடும். அதன்மீது உரிமை கோரி வரும் நபர்கள் மீது பென்டிங் கேஸ் பலவற்றை போட்டு, குண்டர் சட்டத்தில் தள்ளவேண்டும் என்பதுதான் இந்த புது டெக்னிக். முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும் என்பதுபோல், சட்ட விரோத செயலை, சட்ட விரோதமாகத்தான் தடுக்கவேண்டும் என்று உள்ளூர் அதிகாரிகள் ஐடியா கொடுத்துள்ளார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. வேலுமணி

தண்ணீர் தட்டுப்பாட்டு பிரச்னையில் அவர் பெயர் அடிபடுவதால் அதனை தங்களுக்கு சாதகமாக்கி, தண்ணீரை தமிழகத்துக்கு கொடுத்தால் வேலுமணியின் மனம் குளிரும் என்பதால் 20 லட்சம் லிட்டர் தண்ணீரை கேரள அரசு கொடுக்க முன் வந்ததாகவும் அதனை அவர் ஏற்க மறுத்ததாகவும் தகவல் வெளியாகி வருகிறது. 
 

2018 TopTamilNews. All rights reserved.