நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்யலாம்! அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டிப்ஸ்

 

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்யலாம்! அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டிப்ஸ்

கொரோனா வைரஸ்… நம்மில் யாருக்கு வேண்டுமானாலும், எப்போதுவேண்டுமானாலும் வரலாம். தனிநபர் இடைவெளி, முகக்கவசம் அணிவது, கைகளைக் கழுவுவது என அரசாங்கமும், சுகாதாரத்துறையும் சொல்லும் வழிமுறைகளைக் கடைப்பிடியுங்கள். அதேநேரத்தில் எளிய வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம்நோய்கள் வராமல் காத்துக்கொள்ளலாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மற்றும் சர்க்கரை நோய் உள்ளிட்ட வேறு சில உடல்நலக்குறைவு உள்ளவர்கள், வயது முதிர்ந்தவர்களையே கொரோனா வைரஸ் எளிதாகத் தொற்றும். ஆகவே, அனைவரும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ட்விட்டரில் பகிர்ந்துள்ள அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, “அரை லிட்டர் தண்ணீரில் சில வேப்பிலைகளை போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி, வெதுவெதுப்பாக குடிக்கலாம். வேப்பங்கொழுந்தை அரைத்து, உருண்டை செய்து, தேனில் நனைத்து, தினமும் காலையில் விழுங்க, நோயெதிர்ப்பு சக்தியைப் பெறலாம் என்கிறது நம் பாரம்பரியம்” என தெரிவித்துள்ளார்.