`இருப்பை காட்டிக்கொள்ள அறிக்கைவிட்டு விரக்தியை காட்டுகிறார்!’- ஸ்டாலின் மீது பாயும் அமைச்சர் வேலுமணி

“இருப்பை காட்டிக்கொள்ள அறிக்கைகள்விட்டு விரக்தியை காட்டுகிறார். மு.க.ஸ்டாலின் மலிவான அரசியலை இனியும் தொடர வேண்டாம்” என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி காட்டமாக கூறியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 5ம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “தமிழக அரசின் நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளர் நடராஜன் திடீரென மாற்றப்பட்டது ஏன் என்றும் சட்ட விதிகளை மீறி சென்னை மாநகராட்சியிலிருந்து புகழேந்தியை அந்தப் பதவிக்கு நியமித்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும், 2016ம் ஆண்டில் ஓய்வு பெற்ற புகழேந்திக்கு இரண்டு முறை பணி நீட்டிப்பு வழங்கி, அத்தோடு தலைமைப் பொறியாளராக பதவி உயர்வும் வழங்கியது ஏன் என்று கேள்வி எழுப்பியிருந்த மு.க.ஸ்டாலின், 5 ஆயிரம் ரூபாய் பணிகளைக் கவனித்து வருகிறார் என்று பணி நீட்டிப்பு வழங்கப்பட்ட புகழேந்தி, பணியை நேர்த்தியாக செய்ததால் ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட 12 ஆயிரம் கோடி ரூபாய் திட்டத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறாரான வினா எழுப்பி இருந்தார்.

உள்ளாட்சித்துறையில் ஊழலுக்கு ஒத்துழைக்காத அதிகாரிகள் பந்தாடப்படுவது புதிதல்ல என்றும் இன்றும் 11 மாதங்களுக்குப் பிறகு ஒவ்வொரு உள்ளாட்சித்துறை ஊழல்களுக்கும் வேலுமணி பதில் சொல்லியே தீர வேண்டும் என்றும் எந்த விசாரணைக்கும் தயார் என்று பேட்டியளிக்கும் முதல்வர் பழனிசாமி, இந்த 17 ஆயிரம் கோடி ரூபாய் திட்டங்கள், நடராஜன் மாறுதல், புகழேந்தியின் தொடர் பணி நீட்டிப்பு நியமனங்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா என்றும் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் வேலுமணி இன்று பதில் அளித்துள்ளார். அதில், “விதிகளுக்கு உட்பட்டு தான் முதன்மை தலைமை பொறியாளராக புகழேந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சியின் தலைமை பொறியாளராக சட்டப்படியே நடராஜன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இருப்பை காட்டிக்கொள்ள அறிக்கைகள்விட்டு விரக்தியை காட்டுகிறார். மு.க.ஸ்டாலின் மலிவான அரசியலை இனியும் தொடர வேண்டாம். அவதூறு அறிக்கைகளை நிறுத்திக் கொள்வது மக்களுக்கு செய்யும் நன்மையாகும்” என்று கூறியுள்ளார்.

Most Popular

நான் அதிருப்தியிலும் இல்லை; பிரதமரையும் தனியாக சந்திக்கவில்லை- திமுக எம்.பி ஜெகத்ரட்சகன்

திமுகவில் தனக்கு எந்த அதிருப்தியும் கிடையாது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார். திமுகவிலிருந்து ஏராளமான எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு செல்லவிருப்பதாகவும், திமுக தலைமையை சிலர் ஏற்கவில்லை என்றும் தகவல்கள் கசிந்தது. மேலும் தலைவர்...

65 ஆண்டு கால வரலாற்றில் பவானிசாகர் அணை 26 வது முறையாக 100 அடியை எட்டியது!

1956ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட பவானிசாகர் அணை, கடந்த 65 ஆண்டு கால வரலாற்றில் 26 வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது. 2018, 2019 மற்றும் 2020 என தொடர்ந்து 3 ஆண்டுகள்...

போதையில் தகராறு செய்த கணவனை கொலை செய்த மனைவி!

குடிபோதையில் தொடர்ந்து துன்புறுத்தி வந்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் சேலம் மாவட்டம் ஓமலூரில் நிகழ்ந்துள்ளது. பெரியேரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரவேல் என்பவர் போதைக்கு அடிமையான நிலையில் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறில்...

கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

கேரளாவில் இடுக்கி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிக மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கேரளாவின் இடுக்கி, வயநாடு, ஆலப்புழா, காசர்கோடு கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில்...