வாழும் காமராஜர் முதலமைச்சர் பழனிசாமி” – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

 

வாழும் காமராஜர் முதலமைச்சர் பழனிசாமி” – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை கிழக்கு மண்டலத்தில் பல்வேறு சிறப்பு திட்டப்பணிகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுணன், வடக்கு சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி, மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வாழும் காமராஜர் முதலமைச்சர் பழனிசாமி” – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

நிகழ்ச்சிக்கு பின் அன்னூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்பி வேலுமணி, “வாழும் காமராஜர் என அழைக்கப்படும் எடப்பாடி பழனிசாமி நாராயணசாமி நாயுடுவின் திட்டங்களை நிறைவேற்றிவருகிறார். விவசாயிகள் சிரமத்தில் இருப்பதை அறிந்து அவர்களின் கடன்களை தள்ளுபடி செய்துள்ளார். அம்மா அறிவித்த திட்டங்கள், எம்ஜிஆர் அறிவித்த திட்டங்களையும் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றிவருகிறார். 70 ஆண்டுகளுக்கு மேலான பிரச்னையான அத்திக்கடவு திட்டத்தையும் நிறைவேற்றியுள்ளார். இத்திட்டத்திற்கான பணிகள் 50% நிறைவடைந்துள்ளன. விவசாயிகளின் பிரச்னையை அறிந்தவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.” எனக் கூறினார்.

கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்களின், அரை நுாற்றாண்டு கால தேவையான அத்திக்கடவு – அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம், கொங்கு மண்டலத்தில் அரசியல் கட்சிகளின் ஓட்டு வங்கியை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்தது. இத்திட்டத்திற்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடதக்கது.