ஸ்டாலின் ஆண்மையுள்ளவராக இருந்தால் சவாலை சந்திக்க தயாரா? – அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

 

ஸ்டாலின் ஆண்மையுள்ளவராக இருந்தால் சவாலை சந்திக்க தயாரா? – அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

கோவை சிங்காநல்லூர் ஈ.எஸ்.ஐ., மருத்துவமனை, பி.எஸ்.ஜி., மருத்துவமனை, சூலூர் அரசு மருத்துவமனை, பூலுவபட்டி சமுதாய நகர் நல மையங்கள், ஆர்.எஸ்.புரம் எஸ். எல். எம் நகர் நல சுகாதார மையம் உள்ளிட்ட 5 மையங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஒவ்வொரு மையங்களிலும் 25 பேர் பங்கேற்கின்றனர். மருத்துவர்கள் துவங்கி செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் வரை முன்கள பணியாளர்கள் இந்த ஒத்திகை நிகழ்வில் பங்கேற்கின்றனர். ஈ.எஸ்.ஐ. மருத்துவமனை ஒத்திகை நிகழ்வில், அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர் கலந்துகொண்டார்.

ஸ்டாலின் ஆண்மையுள்ளவராக இருந்தால் சவாலை சந்திக்க தயாரா? – அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

அப்போது பேசிய அமைச்சர் எஸ்பி. வேலுமணி, “முதல்வர் வியூகத்தால் தமிழக அரசு நிம்மதியான நிலையை எட்டியுள்ளது. கொரோனா விவகாரத்தில் தமிழகத்தை பின்பற்ற பிரதமர் கூறியுள்ளார். முதற்கட்டமாக 6 லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கப்படும். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. தடுப்பூசி ஒத்திகை அவசியமானது. 2 மணி நேரத்தில் 25 பேருக்கு தான் கொடுக்க முடியும். அதற்காக தான் இந்த ஏற்பாடுகள். கிராம சபை கூட்டத்திற்கு ஆள் அனுப்பி எஸ்.பி.வேலுமணி குழப்பம் ஏற்படுத்த முயற்சிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறார். ஸ்டாலின் கொடுத்தது அவதூறு, ஆதாரமற்றது. அவர் கூறுவது உண்மை நிரூபித்தால் அரசியலை விட்டு சென்று விடுகிறேன். திமுகவில் வாரிசு, குடும்ப அரசியல் இல்லை என ஸ்டாலின் நிரூபணம் செய்வாரா? ஸ்டாலினுக்கு தகுதியே இல்லை.

ஸ்டாலின் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க தடையாய் இருந்தவர்கள் நாங்கள். அதனால் இப்படி அவதூறு பரப்பி வருகிறார். என் மீதான ஊழலை நிரூபித்தால் பதவியை ராஜினாமா செய்ய தயார் அவரால் நிரூபிக்க முடியவில்லை என்றால் ஆண்மையுள்ளவராக இருந்தால் அவர் எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய தயாரா? அந்த நிகழ்ச்சி நடந்ததே எனக்குத் தெரியாது. கிராம சபைக் கூட்டத்தில் பெண் தாக்கப்பட்டவுடன் எனக்கு போன் போட்டு அந்த பெண்ணிடம் நிர்வாகிகள் எனக்குக் கொடுத்துள்ளனர். உடனே நான் ஆறுதல் சொல்லி மருத்துவமனைக்கு செல்லுமாறு நான் கூறினேன்” எனக் கூறினார்.