முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திடீர் சந்திப்பு

 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திடீர் சந்திப்பு

சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்து பேசினார்.

முதல்வர் வேட்பாளர் யார் என்கிற குழப்பம் தீர்க்கப்படாமல், தேர்தல் பணிகளில் அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாது என்கிற இக்கட்டான சூழலில் அதிமுக சிக்கி கொண்டுள்ளது. செயற்குழு கூட்டத்தில், ஓபிஎஸ் – இபிஎஸ் தரப்புக்கு இடையே காரசார விவாதம் நடைபெற்றாலும், முதல்வர் வேட்பாளர் யார் என்பது முடிவாகவில்லை. அக்டோபர் 7 ஆம் தேதி முடிவு செய்யப்படும் என தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திடீர் சந்திப்பு

இந்நிலையில் இன்று காலை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். கடந்தாண்டு அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட மணிகண்டன் திடீரென சந்தித்தார். மேலும் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட தேனிக்கு புறப்பட்டு செல்லவிருப்பதாகவும் தகவல்கள் கசிந்தன. அதிமுக முதல்வர் வேட்பாளர் வரும் 7 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்து பேசினார். முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசிவருகிறார். முன்னதாக அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணியும், தங்கமணியும் முதல்வருக்காக டெல்லி சென்றதாக தகவல்கள் கசிந்தன.