முஸ்லிம் இளைஞர்கள் இந்து பெண்களை சகோதரிகளாக கருத வேண்டும்.. சமாஜ்வாடி எம்.பி. வேண்டுகோள்

 

முஸ்லிம்  இளைஞர்கள் இந்து பெண்களை சகோதரிகளாக கருத வேண்டும்.. சமாஜ்வாடி எம்.பி. வேண்டுகோள்

உத்தர பிரதேச சமாஜ்வாடி எம்.பி. ஹசன், முஸ்லிம் இளைஞர்கள் இந்து பெண்களை சகோதரிகளாக கருத வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த பெண்ணை வேறொரு மதத்தை சேர்ந்த நபர் காதல் வலையில் வீழ்த்தி திருமணம் செய்த பிறகு அந்த பெண்ணை கட்டாயம் மதமாற்றம் செய்வது லவ் ஜிஹாத் என்று சொல்லப்படுகிறது. உத்தர பிரதேசத்தில் கடந்த செவ்வாய்கிழமையன்று லல் ஜிஹாத்தை குற்றமாக்கி புதிய அவசர சட்டத்தை அம்மாநில அமைச்சரவை நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டத்தின்படி, விருப்பத்துடன் மதம் மாறுவதாக இருந்தால் 2 மாதங்களுக்கு முன்பே மாவட்ட கலெக்டரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

முஸ்லிம்  இளைஞர்கள் இந்து பெண்களை சகோதரிகளாக கருத வேண்டும்.. சமாஜ்வாடி எம்.பி. வேண்டுகோள்
எஸ்.டி.ஹசன்

லவ் ஜிஹாத்துக்கு எதிராக உத்தர பிரதேச அரசு அவசர சட்டம் நிறைவேற்றிய இரண்டாவது நாளில், சமாஜ்வாடி எம்.பி. எஸ்.டி. ஹசன், முஸ்லிம் இளைஞர்கள் இந்து பெண்களை சகோதரிகளாக கருத வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: லவ் ஜிஹாத் ஒரு அரசியல் ஸ்டண்ட். நம் நாட்டில் தனிநபர்கள் தங்களது துணையை தேர்ந்தெடுக்க உரிமை உள்ளது. இந்துக்கள் முஸ்லிம்களை திருமணம் செய்கிறார்கள், முஸ்லிம்கள் இந்துக்களை திருமணம் செய்கிறார்கள்.

முஸ்லிம்  இளைஞர்கள் இந்து பெண்களை சகோதரிகளாக கருத வேண்டும்.. சமாஜ்வாடி எம்.பி. வேண்டுகோள்
பா.ஜ.க.

இது போன்ற நிகழ்வுகளின் (திருமணங்கள்) விவரங்களை நீங்கள் பெற்றால், முடிச்சு மகிழ்ச்சியுடன் கட்டப்பட்டிருந்தது என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். விஷயங்கள் தவறாக நடக்கும்போது, முஸ்லிம் இளைஞன் மீது அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். முஸ்லிம் இளைஞர்கள் இந்து பெண்களை சகோதரிகளாக கருதுமாறு கேட்டுக்கொள்கிறேன். இல்லையெனில் அவர்கள் (முஸ்லிம் இளைஞர்கள்) அரசாங்கத்தால் சித்தரவதை செய்யப்படலாம். தேர்தல் நெருங்கும் போது இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே ஒரு இடைவெளியை பா.ஜ.க. உருவாக்குகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.