பா.ஜ.க. மூழ்கும் கப்பல்.. உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியை சந்திக்கும்.. அகிலேஷ் யாதவ்

பா.ஜ.க. மூழ்கும் கப்பல்.. உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியை சந்திக்கும்.. அகிலேஷ் யாதவ்

பா.ஜ.க. மூழ்கும் கப்பல், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. தோல்வியை சந்திக்கும் என அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜக. ஆட்சி நடைபெற்று வருகிறது. அண்மையில் அம்மாநிலத்தில் உள்ள மாவட்டங்களில் பஞ்சாயத்து அமைப்புகளுக்கான தேர்தல் மொத்தம் 4 கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 2ம் தேதி எண்ணப்பட்டது.

பா.ஜ.க. மூழ்கும் கப்பல்.. உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியை சந்திக்கும்.. அகிலேஷ் யாதவ்
தேர்தல் (கோப்புப்படம்)

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக நடைபெறும் கடைசி பெரிய தேர்தல் என்பதால் இதன் முடிவுகள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. நேற்று மாலை 3,050 மாவட்ட பஞ்சாயத்து வார்டுகளின் டிரெண்ட் மற்றும் முடிவுகளின்படி ஆளும் கட்சியான பா.ஜ.க. இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. சமாஜ்வாடி 760 வார்டுகளிலும்,பா.ஜ.க. 719 வார்டுகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 381 வார்டுகளிலும், காங்கிரஸ் 76 இடங்களிலும் வெற்றி அல்லது முன்னணியில் உள்ளன. அதேசமயம் சுயேச்சைகள் மற்றும் சிறிய கட்சிகள் 1,114 வார்டுகளில் முன்னிலை வகித்தன.

பா.ஜ.க. மூழ்கும் கப்பல்.. உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியை சந்திக்கும்.. அகிலேஷ் யாதவ்
பா.ஜ.க.

சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் இது தொடர்பாக கூறுகையில், ஆளும் பா.ஜ.க. மூழ்கும் கப்பல். 202 சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. தோல்வியை சந்திக்கும் என்பதை பஞ்சாயத்து தேர்தல்களின் முடிவுகள் வெளிவாக காட்டுகின்றன என தெரிவித்தார்.