கோவா, மகாராஷ்டிராவில் முன்னதாகவே தென்மேற்கு பருவமழை – 48 மணி நேரத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு

கோவா, மகாராஷ்டிராவில் முன்னதாகவே தென்மேற்கு பருவமழை –  48 மணி நேரத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு

மும்பை: கோவா, மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் ஒரு வாரம் முன்னதாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.

தென்மேற்கு பருவமழை மகாராஷ்டிரா, கோவா மற்றும் ஒடிசா மாநிலங்களில் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே தொடங்கியுள்ளது. இந்த மாநிலங்களின் கடலோரப் பகுதிகளில் நேற்று முன்தினம் பருவமழை பெய்தது. அடுத்த 48 மணி நேரத்தில் இந்த பருவமழை முழு வேகத்தில் தீவிரமடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவா, மகாராஷ்டிராவில் முன்னதாகவே தென்மேற்கு பருவமழை –  48 மணி நேரத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு
Southwest monsoon

இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா மாநிலங்களின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்றும், இதனால் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கடந்த சில நாட்களாக மும்பை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகள் உட்பட மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் பருவமழைக்கு முந்தைய மழை பெய்தது.