கேரளாவில் ஜூன் 1 முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கும்

 

கேரளாவில் ஜூன் 1 முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கும்

கொச்சி: கேரளாவில் ஜூன் 1 முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள சூறாவளி சுழற்சி காரணமாக வருகிற ஜூன் 1-ஆம் தேதி முதல் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. முன்னதாக ஜூன் 5-ஆம் தேதிக்கு பிறகு கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் பொதுவாக கேரளாவில் ஜூன் 1-ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள புதிய சூறாவளி சுழற்சி காரணமாக தென்மேற்கு பருவமழை எப்போதும் போல சரியான சமயத்தில் பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் ஜூன் 1 முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கும்

“மே 31 முதல் ஜூன் 4 வரை தென்கிழக்கு மற்றும் கிழக்கு மத்திய அரேபிய கடலில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதனால், ஜூன் 1 முதல் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு நிலைமைகள் உருவாகியுள்ளன” என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேற்கு-மத்திய அரேபிய கடலிலும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், மே 28 முதல் 31 வரையிலான நாட்களில் தெற்கு தீபகற்ப இந்தியாவின் சில பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் நேற்று நள்ளிரவு முதல் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று கேரள அரசு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், மீன்பிடி நடவடிக்கைகளை தடை செய்துள்ளது.