தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 1 ஆம் தேதி தொடங்குகிறது!

தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 1 ஆம் தேதி தொடங்குகிறது!

தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 1 ஆம் தேதி தொடங்குகிறது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 1 ஆம் தேதி தொடங்குகிறது!

தமிழகத்தை பொறுத்தவரையில் கத்திரி வெயில் நேற்றுடன் முடிந்து விட்டது. ஆனால் கோடை வெப்பம் குறைந்த பாடில்லை. இருப்பினும் வெப்ப சலனம் காரணமாக உள்தமிழகம், மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென்தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், பகுதிகளில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 1 ஆம் தேதி தொடங்குகிறது!

இந்நிலையில் நாளை மறுநாள் தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் கேரளா உள்ளிட்ட தென்இந்திய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை ஜூன் 1 ஆம் தேதி தொடங்குகிறது என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. தென்மேற்கு பருவமழை தாமதமாக ஜூன் 5 ஆம் தேதி தொடங்கும் என கூறியிருந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.