தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது ; எங்கெல்லாம் கனமழை தெரியுமா?

 

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது ; எங்கெல்லாம் கனமழை தெரியுமா?

தென்மேற்கு பருவமழை இன்று தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் முன்னேறியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முன்னேற வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது ; எங்கெல்லாம் கனமழை தெரியுமா?

வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை ,சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை, மிக கனமழையும் மதுரை, விருதுநகர் ,ராமநாதபுரம், தூத்துக்குடி,கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம் ,தர்மபுரி ,திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை தமிழ்நாட்டின் வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், நாளை மறுநாள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் கடலோர மாவட்டங்களில் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 7ம் தேதி மற்றும் 8ம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை ,காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது ; எங்கெல்லாம் கனமழை தெரியுமா?

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் . நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.