கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது!

 

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 3ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளது என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அத்துடன் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு சராசரி அளவில் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது . பொதுவாகவே தென்மேற்கு பருவமழை செப்டம்பர் வரை பெய்யும். 75 சதவீத வருடாந்திர மழை ஜூன் முதல் செப்டம்பர் வரை நம்மால் பெற முடியும்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது!

ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவ மழை அளவு நீண்ட கால சராசரி அளவில் 101 சதவீதமாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் இந்த முறை பருவமழை பரவலாக காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டில் சராசரியாக 101 சதவீதம் அதாவது சராசரியைவிட அதிகமான அளவுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது!

இந்நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த வாரத்தில் தமிழகத்திலும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் மாதம் வரை தென் மேற்கு பருவ மழை நீடிக்கும் எனவும் இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. கேரளாவில் தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழையால் தமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் பயனடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.