வந்துவிட்டது கொரோனா 3ஆம் அலை… உலகின் முதல் நாடாக அறிவித்தது தென்னாப்பிரிக்கா!

 

வந்துவிட்டது கொரோனா 3ஆம் அலை… உலகின் முதல் நாடாக அறிவித்தது தென்னாப்பிரிக்கா!

கொரோனா முதல் அலையால் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் பாதிப்பைச் சந்தித்தன. அப்போதே சுதாரித்துக்கொண்ட ஒருசில நாடுகள் இரண்டாம் அலையிலிருந்து தங்கள் மக்களைப் பாதுகாத்தனர். ஆனால் பிரிட்டன், பிரேசில், இந்தியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்டன. குறிப்பாக இந்தியா, தென்னாப்பிரிக்கா, பிரிட்டன் இந்த மூன்று நாடுகளிலும் உருமாறிய கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

வந்துவிட்டது கொரோனா 3ஆம் அலை… உலகின் முதல் நாடாக அறிவித்தது தென்னாப்பிரிக்கா!

இரண்டாம் அலையில் கொரோனா இளைஞர்களைக் கூறிவைத்து தாக்குவதாலும் அவர்கள் இறப்பதாலும் மனித வளங்கள் குறைந்துவருகின்றன. தென்னாப்பிரிக்காவில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்துள்ளது. அந்நாடு மிகக் கடுமையாகப் போராடி வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 67 சதவீத தடுப்பூசி செலுத்த இலக்காக நிர்ணயித்துள்ளது. இச்சூழலில் அங்கு டெக்னிக்கலாக மூன்றாம் அலை வந்துவிட்டதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

வந்துவிட்டது கொரோனா 3ஆம் அலை… உலகின் முதல் நாடாக அறிவித்தது தென்னாப்பிரிக்கா!

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,149 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 17 லட்சத்து 22 ஆயிரத்து 86 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 57 ஆயிரத்து 410 பேர் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். கடந்த ஏழு நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் சராசரி 5,959ஆக உயர்ந்துள்ளதாகவும் இது அரசின் அமைச்சக ஆலோசனைக் குழு நிர்ணயித்த புதிய அலைக்கான வரம்பைத் தாண்டியிருப்பதாகவும் தொற்று நோய்க்கான தேசிய நிறுவனம் எச்சரித்துள்ளது கொரோனா உறுதியாகும் சதவீதமும் 15.7ஆக உயர்ந்துள்ளதால் மூன்றாம் அலை அச்சம் எழுந்துள்ளது.