ராகுல் காந்தி மாட்டேன்னு சொல்லிவிட்டால்….. பிளான் B ரெடி…. காங்கிரஸ் தலைவர்கள் தகவல்

 

ராகுல் காந்தி மாட்டேன்னு சொல்லிவிட்டால்….. பிளான் B ரெடி…. காங்கிரஸ் தலைவர்கள் தகவல்

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க மறுத்து விட்டால், பிளான் B திட்டத்தை செயல்படுத்தலாம் என்று மூத்த காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்ததாக உறுதி செய்யப்படாத தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டின் பாரம்பரியமிக்க கட்சியான காங்கிரஸ் தனது பெருமை மற்றும் நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருவதாக தெரிகிறது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று அப்போது அந்த கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். அது முதல் கடந்த 18 மாதங்களாக அந்த கட்சி நிரந்தர தலைவர் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி இருந்தாலும், அவரது உடல் நிலை கவலை அளிப்பதாக உள்ளது.

ராகுல் காந்தி மாட்டேன்னு சொல்லிவிட்டால்….. பிளான் B ரெடி…. காங்கிரஸ் தலைவர்கள் தகவல்
சோனியா காந்தி

இந்த சூழ்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில், கட்சிக்கு நிரந்தர தலைமை வேண்டும், கட்சியில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். இதனால் கட்சிக்கு பெரிய சலசலப்பு ஏற்பட்டது. இதன் எதிரொலியாக ராகுல் காந்தி மீண்டும் கட்சியின் தலைவராக வேண்டும் கோரிக்கைகள் எழுந்தன. அண்மையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறுகையில், நான் உள்பட 99.99 சதவீத காங்கிரஸ்காரர்கள் ராகுல் காந்தி மீண்டும் தலைவராக வேண்டும் என்று விரும்புகின்றனர் என்று தெரிவித்தார்.

ராகுல் காந்தி மாட்டேன்னு சொல்லிவிட்டால்….. பிளான் B ரெடி…. காங்கிரஸ் தலைவர்கள் தகவல்
காங்கிரஸ்

ஆனால் ராகுல் காந்தி கட்சி தலைவர் பதவியை ஏற்பதில் தயக்கம் காட்டுவதாக தெரிகிறது. ராகுல் காந்தியின் அறிவிக்கப்படாத வெளிநாட்டு பயணம் கட்சி தலைமைக்கு ஒரு செய்தியை கூறுகிறது. அதுஎன்னவென்றால் தலைவர் பதவியை ஏற்க அவர் தயாராக இல்லை என்பதுதான் என்று சிலர் கூறுகின்றனர். அதேசமயம் ராகுல் காந்தியை எப்படியும் தலைவர் பதவியை ஏற்க சம்மதிக்க வைத்துவிடலாம் என்று அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் நம்புகின்றனர். அதேசமயம் ராகுல் காந்தி மனசு மாறவில்லையென்றால், திட்டம் B ஒன்றை செயல்படுத்துவது குறித்து காங்கிரசில் விவாதிக்கப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ஒரு கூட்டு தலைமைத்துவ முறையை பின்பற்றலாம் என்று கடந்த ஆகஸ்டில் சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 தலைவர்கள் பிரிந்துரை செய்துள்ளதாக அந்த கட்சியை சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத ஒரு மூத்த தலைவர் தெரிவித்துள்ளார்.