கங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி… காரை விட்டு இறங்கியதும் எமர்ஜென்சி வார்டுக்குள் நுழைந்தார்!

கங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி… காரை விட்டு இறங்கியதும் எமர்ஜென்சி வார்டுக்குள் நுழைந்தார்!

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி நெஞ்சு வலி காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

அங்குள்ள உள்ளூர் செய்தி நிறுவனங்களின் தகவல்படி, கங்குலி அவரின் சொந்த காரிலேயே மருத்துவமனை வந்தார் என்றும், காரை விட்டு இறங்கியதும் உடனடியாக மருத்துவமனையின் எமர்ஜென்சி வார்டுக்குள் நுழைந்தார் எனவும் கூறப்படுகிறது.

கங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி… காரை விட்டு இறங்கியதும் எமர்ஜென்சி வார்டுக்குள் நுழைந்தார்!
கங்குலி

கடந்த ஜனவரி 2ஆம் தேதி நெஞ்சு வலி காரணமாக கொல்கத்தாவிலுள்ள வுட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 9 பேர் கொண்ட மருத்துவக் குழு சிகிச்சையளித்தது.

சிகிச்சையில் கங்குலியின் இதயத்தில் மூன்று இடத்தில் அடைப்பிருப்பது தெரியவந்தது. அதில் ஒரு அடைப்புக்கு மட்டும் ஆஞ்சியோபிளாஸ்டி செய்த மருத்துவர்கள், 2 வாரங்களுக்குப் பிறகு மீண்டும் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்படும் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

கங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி… காரை விட்டு இறங்கியதும் எமர்ஜென்சி வார்டுக்குள் நுழைந்தார்!

மேலும், அவர் வீட்டுக் கண்காணிப்பில் இருப்பார் எனக் கூறி ஜனவரி 7ஆம் தேதி மருத்துவமனை டிஸ்சார்ஜ் செய்தது. மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன பிறகு, மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார். இச்சூழலில் அவர் மீண்டும் நெஞ்சுவலியால் அவதிப்பட்டதையடுத்து, மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறார்.