“ஆப் சைடின் தாதா… ஆக்ரோஷ கேப்டன்” – படமாகும் ‘வங்கப்புலி’ கங்குலியின் வாழ்க்கை வரலாறு!

“ஆப் சைடின் தாதா… ஆக்ரோஷ கேப்டன்” – படமாகும் ‘வங்கப்புலி’ கங்குலியின் வாழ்க்கை வரலாறு!

பிசிசிஐ தலைவராக இருக்கும் சவுரவ் கங்குலியின் பெயர் இடம்பெறாமல் இந்திய அணியில் ஆகச்சிறந்த கேப்டன்களை வரிசைப்படுத்திவிட முடியாது. 2002ஆம் ஆண்டு அவர்களின் சொந்த மண்ணிலேயே இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி செய்த சம்பவம்1983ஆம் ஆண்டு இந்தியா உலகக்கோப்பை வென்றதற்கு நிகரான ஒன்று. தொடரை வென்றபோது கங்குலி ஜெர்சியை கழற்றி சுழற்றும் அந்தக் காட்சி இன்றும் இந்திய ரசிகர்களின் கண்களுக்குள் நிழலாடும். அந்தளவிற்கு உணர்வுப்பூர்வாமான போட்டி அது.

“ஆப் சைடின் தாதா… ஆக்ரோஷ கேப்டன்” – படமாகும் ‘வங்கப்புலி’ கங்குலியின் வாழ்க்கை வரலாறு!

இப்போது விராட் கோலி எவ்வளவு ஆக்ரோஷமாக இருந்தாரோ அதேபோன்றதொரு நிலையிலிருந்து தான் வீரர்களைக் கட்டமைத்து அணியைக் கட்டமைத்தார் அன்றைய கேப்டன் சவுரவ் கங்குலி. அதனால் தான் அவர் இப்போதும் பிசிசிஐ தலைவருக்கு மிக மிக தகுதிவாய்ந்தவராகப் பார்க்கப்படுகிறார். கூல் கேப்டன் தோனி ஐசிசி கோப்பைகளைக் கைப்பற்ற விதை போட்டவர் தான் இந்த ஆக்ரோஷ கேப்டன் கங்குலி என்பதை மறக்கக் கூடாது. கேப்டன்ஷிப் மட்டுமல்லாமல் ஆப் சைடின் கடவுள் என்றழைக்கும் வண்ணம் வெளுத்து வாங்கும் மரண அடி பேட்ஸ்மேனாகவும் வலம் வந்தவர் கங்குலி.

“ஆப் சைடின் தாதா… ஆக்ரோஷ கேப்டன்” – படமாகும் ‘வங்கப்புலி’ கங்குலியின் வாழ்க்கை வரலாறு!

தற்போது அவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக்கவுள்ளது அவரின் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம் தனது வாழ்க்கையைப் படமாக்க கங்குலி ஒப்புக்கொண்டுள்ளார். தனது வாழ்க்கை பயணத்தைக் கதையாக எடுக்க சவுரவ் கங்குலி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இந்த படம் வியாகாம் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்படுகிறது. இதனை யார் இயக்க போகிறார், யார் கங்குலி வேடம் தரிக்கபோகிறார் என்ற எந்த தகவலும் வெளியாகவில்லை. இவையனைத்தும் முடிவு செய்யப்பட்டு விரைவில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

“ஆப் சைடின் தாதா… ஆக்ரோஷ கேப்டன்” – படமாகும் ‘வங்கப்புலி’ கங்குலியின் வாழ்க்கை வரலாறு!

கங்குலியின் குழந்தைப் பருவத்திலிருந்து பிசிசிஐ தலைவராக அவர் உயர்ந்தது வரை படமாக்கப்படவுள்ளது. ரன்பீர் கபூர் கங்குலி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாகக் கூறினாலும், தனக்கு பிடித்த நடிகர் ரித்திக் ரோஷன் என அண்மையில் கங்குலி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சமீப நாட்களாக பல்வேறு துறைகளில் பிரபலமானவர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுக்க பாலிவுட் திரையுலகினர் பேராசை கொண்டுள்ளனர் என்றே தெரிகிறது.

“ஆப் சைடின் தாதா… ஆக்ரோஷ கேப்டன்” – படமாகும் ‘வங்கப்புலி’ கங்குலியின் வாழ்க்கை வரலாறு!

அதற்குக் காரணம் தோனியின் ms dhoni the untold story படம் முக்கியமானது. அப்படம் கொடுத்த வெற்றியில் அடுத்தடுத்து பயோபிக் படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே கிரிக்கெட் கடவுள் சச்சின், அசாருதீன் ஆகியோரின் படங்களும் வெளிவந்துள்ளன. மித்தாலி ராஜ் வாழ்க்கை வரலறு, 1983 உலகக்கோப்பை ஆகிய படங்களும் வெளிவரவிருக்கின்றன.