என் மகனுக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்கிற வருத்தம்… மனம் திறந்த ஓபிஎஸ்

 

என் மகனுக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்கிற வருத்தம்… மனம் திறந்த ஓபிஎஸ்

தேனி தொகுதியில் போட்டியிட்டு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்பியானதுமே அவர் மத்திய அமைச்சரவையில் இடம் பெறப் போகிறார் என்ற பரபரப்பு பேச்சுகள் எழுந்தன. ஆனால் மோடி அமைச்சரவையில் ரவீந்தரநாத் இடம்பெறவில்லை. இதன் பின்னர் மத்திய அமைச்சரவை இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதற்கு முன்னதாகவே மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் மாற்றி அமைக்கப்படும் அமைச்சரவையில் ரவீந்திரநாத்துக்கு நிச்சயம் இடம் உண்டு என்ற பேச்சு மீண்டும் எழத் தொடங்கியது. ஆனாலும் மாற்றியமைக்கப்பட்ட புதிய மத்திய அமைச்சரவையில் ரவீந்திரநாத் இடம் பெறவில்லை. மாறாக தமிழக பாஜக தலைவர் வேல்முருகன் இடம்பெற்றார்.

என் மகனுக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்கிற வருத்தம்… மனம் திறந்த ஓபிஎஸ்

இதையடுத்து விழுப்புரத்தில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக வால்தான் தோற்றுப்போனோம். பாஜகவுடன் கூட்டணி வைக்காமல் இருந்தால் அதிமுக வெற்றி பெற்றிருக்கும் என்று பேசியது பெரும் சர்ச்சையானது. உடனே இதற்கு, அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததால் தான் பாஜக தோற்றுப்போனது. இல்லை என்றால் பாஜக வெற்றி பெற்றிருக்கும் என்று பாஜக பதிலடி கொடுத்தனர்.

என் மகனுக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்கிற வருத்தம்… மனம் திறந்த ஓபிஎஸ்

ஓபிஎஸ் மகனுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கவில்லை என்பதால் தான் அதை மறைமுகமாக அந்த கோபத்தை வெளிப்படுத்த தான் சி.வி. சண்முகம் அப்படி பேசினார் என்ற பேச்சு ஒரு பக்கம் இருந்தது. அதே நேரம் ஓபிஎஸ் மகனுக்கு அமைச்சர் பொறுப்பு கொடுக்கக் கூடாது என்பதற்காகத்தான் பாஜக தலைமையினை வெறுப்பேற்றும் விதமாக சி.வி. சண்முகத்தை விட்டு இப்படி பேச சொன்னார் எடப்பாடி பழனிச்சாமி என்றும் ஒரு பேச்சு எழுந்தது.

என் மகனுக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்கிற வருத்தம்… மனம் திறந்த ஓபிஎஸ்

அந்த சூழலில் அதிமுக -பாஜக கூட்டணி தொடர்கிறது என்று எடப்பாடி பழனிச்சாமியும், ஓ. பன்னீர்செல்வமும் அறிவித்து சர்ச்சைக்கு முடிவு கட்டினர்.

இதன்பின்னர் ஓ. பன்னீர்செல்வம் -எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு சென்று பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியிருப்பது குறித்து மீண்டும் தன் மகனுக்காக அமைச்சரவையில் இடம் கேட்டுத்தான் ஓபிஎஸ் டெல்லிக்கு சென்றதாகவும் ஒரு பேச்சு எழுந்திருக்கிறது.

இந்நிலையில் இன்று தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக வை கண்டித்து உரிமைக்குரல் முழக்க போராட்டம் நடத்தியது அதிமுக. போடியில் நடந்த உரிமை குரல் முழக்க போராட்டத்தில் பங்கேற்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், திமுகவிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்.

என் மகனுக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்கிற வருத்தம்… மனம் திறந்த ஓபிஎஸ்

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, ரவீந்திரநாத் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சர் பதவி கொடுப்பதும், கொடுக்காததும் பாஜகவின் நிலை. அது அவர்கள் எடுக்கின்ற முடிவு எனத் தெரிவித்த ஓபிஎஸ்,என் மகன் ரவீந்திரநாத்திற்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்ற வருத்தம் எனக்கு கிடையாது. நான் டெல்லிக்கு சென்றது அது குறித்த விவகாரத்திற்காக அல்ல. மேகதாது அணை கட்ட கர்நாடகத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்துவதற்காக தான் நான் டெல்லிக்கு சென்றேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அதிமுகவில் பிளவு ஏற்பட்டு இருப்பதாகவும் ஓபிஎஸ் -இபிஎஸ் இருவரும் இருவேறு திசைகளில் செல்வதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு, ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் நானும் எடப்பாடி பழனிச்சாமியும் ஒற்றுமையாக இருந்து கட்சியை வழி நடத்தி வந்தோம் . ஒற்றுமையாகவே இருக்கிறோம். சசிகலாவால் ஒருபோதும் அதிமுகவை கைப்பற்ற முடியாது என்று தெரிவித்துள்ளார்.