கொரோனா கட்டுப்பாடுகள்- பக்தர்கள் இன்றி சொர்க்க வாசல் திறப்பு

 

கொரோனா கட்டுப்பாடுகள்- பக்தர்கள் இன்றி சொர்க்க வாசல் திறப்பு

திருவள்ளூர்

மார்கழி மாதத்தில் பெருமாள் கோயில்களில் முக்கிய வழிபாடான வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு இன்று , தமிழகம் முழுவதும் முக்கிய கோயில்களில் நடைபெற்றது. இந்த நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். இந்த நிலையில், இந்த ஆண்டு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

கொரோனா கட்டுப்பாடுகள்- பக்தர்கள் இன்றி சொர்க்க வாசல் திறப்பு

108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் கடந்த டிசம்பர் மாதம் 16-ந் தேதி வைகுண்ட ஏகாதசி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை 4 மணிக்கு வீரராகவ பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, காலை, 5 மணிக்கு சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசலை வந்தடைந்தது.

அரசு வழிகாட்டு நெறிமுறைகள் காரணமாக பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டதால் பக்தர்களின்றி சொர்க்கவாசலம் திறப்பு நிகழ்ச்சி முதல் முறையாக நடைபெற்றது. பூஜைகள் முடிந்த பின்னர் காலை 06.30 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.