மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துக்கூறிய நடிகர் சூரி!

 

மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துக்கூறிய நடிகர் சூரி!

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சூரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துக்கூறிய நடிகர் சூரி!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை வாக்குகளை பெற்றது. பெரும்பான்மைக்கு 118 தொகுதிகளில் வெற்றிப்பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில் திமுக கூட்டணிக் 159 இடங்களில் அமோக வெற்றிப்பெற்றனர். இதனைத் தொடர்ந்து வரும் 7 ஆம் தேதி தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்கவுள்ளார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துக்கூறிய நடிகர் சூரி!

இந்நிலையில் சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நடிகர் சூரி நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ள உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தார். அவருக்கும் நடிகர் சூரி வாழ்த்து தெரிவித்தார்.