சூரரைப் போற்று படத்தின் ட்ரெய்லர் வெளியீடு தேதி அறிவிப்பு!

 

சூரரைப் போற்று படத்தின் ட்ரெய்லர் வெளியீடு தேதி அறிவிப்பு!

இறுதிச்சுற்று படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துவரும் திரைப்படம் சூரரைப் போற்று. இந்த படத்தில் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, நடிகை அபர்ணா பாலமுரளி, ஜாக்கி ஷெராப் உட்பட பலர் நடித்துள்ளனர். சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஏர் டெக்கான் உரிமையாளர் ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இது வாழ்க்கை வரலாறு படமல்ல.

இந்நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த சூரரைப் போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா காரணமாக 6 மாதமாக தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையிலும், தியேட்டர் எப்போது திறக்கும் என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்காததாலும் சூர்யா திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இந்நிலையில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று திரைப்படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் மாதம் 26 காலை 10 மணிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.