Home சினிமா சூரரைப்போற்றுக்கு தடையில்லா சான்றிதழை வழங்கியது விமானப்படை! எப்போது ரிலீஸ்?

சூரரைப்போற்றுக்கு தடையில்லா சான்றிதழை வழங்கியது விமானப்படை! எப்போது ரிலீஸ்?

சூரரைப்போற்று திரைப்படத்திற்கான தடையில்லா சான்றிதழை விமானப்படை வழங்கியது.

இறுதிச்சுற்று படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துவரும் திரைப்படம் சூரரைப் போற்று. இந்த படத்தில் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, நடிகை அபர்ணா பாலமுரளி, ஜாக்கி ஷெராப் உட்பட பலர் நடித்துள்ளனர். சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஏர் டெக்கான் உரிமையாளர் ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இது வாழ்க்கை வரலாறு படமல்ல.

ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த சூரரைப் போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்தில் விமானப்படை தொடர்பான காட்சிகள் வருவதால் படத்தை வெளியிட இந்திய விமானப்படையிலிருந்து தடையில்லா சான்றிதழ் கிடைக்க வேண்டும். சான்றிதழ் இன்னும் கிடைக்காததால் படம் தாமதமாக வெளியாக வாய்ப்பிருப்பதாக நடிகர் சூர்யா நேற்று அறிக்கை வாயிலாக வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் சூரரைப் போற்று திரைப்படத்திற்கு தடையில்லாச் சான்றிதழ் விமானப்படையால் கையெழுத்தாகியுள்ளது. இருந்தபோதிலும் திட்டமிட்டபடி அக்டோபர் 30-ஆம் தேதி சூரரைப்போற்று வெளியாகாது எனவும் தீபாவளிக்கு வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாவட்ட செய்திகள்

Most Popular

“திமுகவிடம் அஞ்சுக்கும் 10க்கும் தொங்கும் ‘நல்ல கட்சி’ காங்கிரஸ்” – கொளுத்தி போட்ட பழ.கருப்பையா!

2016ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸுக்கு 40 சீட்டுகள் கொடுத்ததால் தான் திமுக வெற்றியை நழுவவிட்டது என்ற கருத்து திமுக அனுதாபிகளிடையே நீண்ட நாளாக இருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் அதனை வெளிப்படையாகவே...

நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்… ஸ்டாலின் போடவிருக்கும் முக்கிய உத்தரவு!

திமுக கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்திருக்கிறது. மறுபுறம் வேட்பாளர்களை டிக் செய்வதற்கான நேர்காணல் நடந்துகொண்டிருக்கிறது. இரு நாட்களாக இந்த நேர்காணல் நடைபெற்றுவருகிறது.

ஜோலார்பேட்டை அருகே 3 டன் கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல்!

திருப்பத்தூர் ஜோலார்பேட்டை அருகே ரயில் மூலம் கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருப்பத்தூர்...

கைவிட்ட சசிகலா; தடா போட்ட எடப்பாடி… டிடிவி எடுத்த திடீர் முடிவு!

சசிகலாவை மலை போல் நம்பிக்கொண்டிருந்த டிடிவி தினகரனுக்கு நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. அதனால் தான் இரவோடு இரவாகப் பேட்டி கொடுத்த தினகரன், அமமுக சோர்வடைவது...
TopTamilNews