”இந்தியாவில் பிளே ஸ்டேஷன் 5 விலை ரூ. 39,990ல் தொடக்கம்” – சோனி அறிவிப்பு

 

”இந்தியாவில் பிளே ஸ்டேஷன் 5 விலை ரூ. 39,990ல் தொடக்கம்” – சோனி அறிவிப்பு

விளையாட்டு பிரியர்கள் ஆவலுடன் காத்திருக்கும் பிளே ஸ்டேஷன் 5 கேமிங் சாதனத்தின் விலை 39,990 ரூபாயிலிருந்து தொடங்கும் என சோனி நிறுவனம் அறிவித்துள்ளது.

”இந்தியாவில் பிளே ஸ்டேஷன் 5 விலை ரூ. 39,990ல் தொடக்கம்” – சோனி அறிவிப்பு

சோனி நிறுவனத்தின் பிளே ஸ்டேஷன் சாதனங்கள், கேமிங் உலகில் முன்னணி சாதனங்களில் ஒன்று. பல கேமிங் பிரியர்களை தன் வசம் கட்டிப்போட்டு வைத்துள்ள இந்த சாதனம், அவ்வப்போது பல மாற்றங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், விரைவில் பிளே ஸ்டேஷன் 5 சாதனம் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்தியாவில் இதன் விலை என்ன என்பது குறித்து தற்போது சோனி அறிவித்துள்ளது. அதன்படி, பிளே ஸ்டேஷன் 5 சாதனத்தின் டிஜிட்டல் எடிஷன் 39,990 ரூபாய் என்ற விலைக்கு கிடைக்கும் என்றும், வழக்கமான சாதனம் 49,990 ரூபாய் என்ற விலைக்கு கிடைக்கும் என்று சோனி நிறுவனம் அறிவித்துள்ளது.

”இந்தியாவில் பிளே ஸ்டேஷன் 5 விலை ரூ. 39,990ல் தொடக்கம்” – சோனி அறிவிப்பு

மேலும், இத்துடன் டூயல் சென்ஸ் வயர்லெஸ் கன்ட்ரோலர், 5990 ரூபாய்க்கும், எச்டி கேமரா 5190 ரூபாய்க்கும், பல்ஸ் 3டி வயர்லெஸ் ஹெட்செட் 8,590 ரூபாய்க்கும், மீடியா ரிமோட் 2590 ரூபாய்க்கும், டூயல் சென்ஸ் சார்ஜிங் ஸ்டேஷன் 2590 ரூபாய்க்கும் கிடைக்கும் என தெரிகிறது.

பிளே ஸ்டேஷன் 5 கேமிங் சாதனம் வரும் நவம்பர் மாதம் 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதுவரை எந்த தேதியும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • எஸ். முத்துக்குமார்