எல்லாருக்கும் உதவுறீங்க.. என் திருமணத்துக்கு நிதியுதவி செய்வீ்ங்களா?.. ரசிகருக்கு சோனு சூட்டின் வேடிக்கையான பதில்

 

எல்லாருக்கும் உதவுறீங்க.. என் திருமணத்துக்கு நிதியுதவி செய்வீ்ங்களா?.. ரசிகருக்கு சோனு சூட்டின் வேடிக்கையான பதில்

ரசிகர் ஒருவர் என் திருமணத்துக்கு நிதியுதவி செய்வீங்களா என்று கேட்டதற்கு, நடிகர் சோனு சூட் புத்திசாலிதனமாக பதில் அளித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் சோனு சூட் திரையில் ஹீரோ, வில்லன், காமெடியன் என பல வேடங்களில் தோன்றினாலும் நிஜத்தில் அவர் கதாநாயகனாகத்தான் வாழ்கிறார். லாக்டவுன் காலத்தில் மகாராஷ்டிராவில் சிக்கி தவித்த ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல பஸ் வசதி உள்பட பல்வேறு உதவிகளை செய்தார். மேலும் கஷ்டபடுபவர்களுக்கு தொடர்ந்து சோனு சூட் உதவி வருவதால் மக்கள் மத்தியில் அவர் ரட்சகராக பார்க்கப்படுகிறார்.

எல்லாருக்கும் உதவுறீங்க.. என் திருமணத்துக்கு நிதியுதவி செய்வீ்ங்களா?.. ரசிகருக்கு சோனு சூட்டின் வேடிக்கையான பதில்
திருமணம்

சோனு சூட் ரசிகர்கள் உதவி வேண்டி அவரை டிவிட்டரில் தொடர்பு கொள்கின்றனர். சோனு சூட்டும் அவர்களை ஏமாற்றம அடையவிடுவதில்லை. உதவி வேண்டி பல உண்மையான கோரிக்கைகள் வரும் வேளையில், அவர் உதவ முடியாத பல வேடிக்கையான கோரிக்கைகளும் அவருக்கு வருகிறது. அப்படி ஒரு கோரிக்கையை சோனு சூட்டிடம் முன்வைத்தார். அதற்கு சோனு சூட் புத்திசாலிதனமாக பதில் அளித்துள்ளார்.

எல்லாருக்கும் உதவுறீங்க.. என் திருமணத்துக்கு நிதியுதவி செய்வீ்ங்களா?.. ரசிகருக்கு சோனு சூட்டின் வேடிக்கையான பதில்
சோனு சூட்

டிவிட்டரில் சோனு சூட்டிடம், நீங்கள் என் திருமணத்துக்கு நிதியுதவி செய்வீர்களா? சார் என்று இந்தியில் பதிவு செய்து இருந்தார். அதற்கு சோனு சூட் புத்திசாலிதனமாக மற்றும் வேடிக்கையாக, ஏன் முடியாது. நான் மந்திரங்களை ஓதுவேன். நீங்கள் பெண்ணை கண்டுபிடிக்கும் கஷ்டத்தை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று பதிவு செய்து இருந்தார்.