செப்டம்பர் வரை இலவசமாக உணவு தானியங்கள் கொடுங்க.. பிரதமருக்கு கடிதம் எழுதிய சோனியா காந்தி!

 

செப்டம்பர் வரை இலவசமாக உணவு தானியங்கள் கொடுங்க.. பிரதமருக்கு கடிதம் எழுதிய சோனியா காந்தி!

sonia Gandhi, free food grains, modi, பிரதமர் மோடி, சோனியா காந்தி, இலவச உணவு தானியங்கள்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: நாடு கடுமையான லாக்டவுனுக்கு சென்ற கிட்டத்தட்ட சுமார் மாதங்களால் கோடிக்கணக்கான இந்தியர்கள் வறுமையில் விழும் அபாயத்தில் உள்ளனர். வாழ்வாதாரத்தில் கடுமையான பாதிப்பு ஏற்படுத்தியது, நகர்புறம் மற்றும் கிராமப்புற ஏழைகள் நீண்ட கால பாதுகாப்பின்மைக்கு வழி வகுத்தது.

செப்டம்பர் வரை இலவசமாக உணவு தானியங்கள் கொடுங்க.. பிரதமருக்கு கடிதம் எழுதிய சோனியா காந்தி!

தற்போதைய சூழ்நிலையின்படி, நாட்டில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் எதிர்கொள்ளும் பசி நெருக்கடிக்கு தீா்வு காண உணவு உரிமைகள் விரிவாக்கப்பட வேண்டும். லாக்டவுன் தொடக்கத்தில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அந்தியோதயா அண்ணா யோஜனா மற்றும் முன்னுரிமை குடும்பங்களுக்கு 5 கிலோ உணவு தானியங்கள் ஜூன் வரையிலான 3 மாதங்களுக்கு வழங்க லாக்டவுன் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது. எந்தவொரு மத்திய அல்லது மாநில பி.டி.எஸ். திட்டத்தின்கீழ் வராத புலம்பெயர்ந்தோருக்கு மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு 5 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

இந்த இலவச உணவு தானியங்கள் ஏற்பாட்டை மேலும் 3 மாதங்களுக்கு அதாவது செப்டம்பர் வரை நீட்டிக்க மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும். பல மாநிலங்கள் இதைக் கோரியுள்ளன. கணிசமான எண்ணிக்கையிலான ஏழை குடும்பங்கள் பி.டி.எஸ். அமைப்பிலிருந்து தொடர்ந்து விலக்கப்படுகின்றன. இது போன்ற அனைத்து குடும்பங்களுக்கும் தற்காலிக ரேஷன் கார்டுகள் வழங்கப்பட வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள ஆலோசனைகளை பரிசீலனை செய்து மற்றும் முடிவுகளை மத்திய அரசு அறிவிக்கும் என நம்புகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்து இருந்தார்.