மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்க மறுப்பது மோடி அரசாங்கத்தின் துரோகம்…. சோனியா காந்தி ஆவேசம்

மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்க மறுப்பது மோடி அரசாங்கத்தின் துரோகம்…. சோனியா காந்தி ஆவேசம்

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி நேற்று வீடியோ கான்பரன்சிங் வாயிலாக காங்கிரஸ் முதல்வர்கள் மற்றும் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்க முதல்வர்களுடன் கலந்துரையாடினார். அப்போது மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி. நிலுவை, நீட் மற்றும் ஜே.இ.இ. நுழைவு தேர்வுகள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து முதல்வர்களுடன் சோனியா ஆலோசனை செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்க மறுப்பது மோடி அரசாங்கத்தின் துரோகம்…. சோனியா காந்தி ஆவேசம்
சோனியாவுடன் பா.ஜ.க. அல்லாத முதல்வர்கள் சந்திப்பு

மத்திய-மாநில உறவுகள் தொடர்பாக பல சிக்கல்கள் உள்ளன. மேலும் நாடாளுமன்றம் 3 வாரங்களுக்குள் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாம் ஒருங்கிணைந்து செயல்பட ஒரு தொடர்பு இருக்க வேண்டும் என நான் நினைத்தேன்.ஜி.எஸ்.டி. இழப்பீடு ஒரு பெரிய பிரச்சினையாக தெரிகிறது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, சரியான நேரத்தில் மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்படுவது மிக முக்கியமானது. ஆனால் அது நடப்பதில்லை. நிலுவை தொகை குவிந்துள்ளது மற்றும் மாநிலங்களின் நிதி நிலவரம் மோசமாக உள்ளது.

மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்க மறுப்பது மோடி அரசாங்கத்தின் துரோகம்…. சோனியா காந்தி ஆவேசம்

2020 ஆகஸ்ட் 11ம் தேதியன்று நடந்த நிதி நிலைக்குழுவின் கூட்டத்தில், நடப்பு ஆண்டுக்கான 14 சதவீத கட்டாய இழப்பீட்டை மத்திய அரசு செலுத்தும் நிலையில் இல்லை என நிதி செயலாளர் தெளிவாக கூறினார். மாநிலத்துக்கு இழப்பீடு வழங்க மறுப்பது மோடி அரசாங்கத்தின் துரோகத்துக்கு குறைவே இல்லை. மாநில அரசுகள் மற்றும் இந்திய மக்களுக்கு துரோகம். புதிய கல்வி கொள்கை முற்போக்கான,மதச்சார்பற்ற மற்றும் அறிவியல் மதிப்புகளுக்கு ஒரு பின்னடைவாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.