பொருளாதார வீழ்ச்சி நேரத்தில் பெட்ரோல், டீசல் விலையை அதிகரிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை – சோனியா காந்தி

 

பொருளாதார வீழ்ச்சி நேரத்தில் பெட்ரோல், டீசல் விலையை அதிகரிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை – சோனியா காந்தி

டெல்லி: பொருளாதார வீழ்ச்சி நேரத்தில் பெட்ரோல், டீசல் விலையை அதிகரிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

கொரோனா பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கத்தால் பெரிய அளவில் வேலையின்மை மற்றும் வணிகங்கள் அழிவு ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிகரிப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

பொருளாதார வீழ்ச்சி நேரத்தில் பெட்ரோல், டீசல் விலையை அதிகரிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை – சோனியா காந்தி

அதில் “கலால் வரி உயர்வு மற்றும் டீசல் பெட்ரோல் விலை அதிகரிப்பு ஆகியவற்றால் மத்திய அரசு கிட்டத்தட்ட ரூ.2,60,000 கோடி கூடுதல் வருவாயைப் பெற முயற்சிக்கிறது. இதனால் மக்கள் கற்பனை செய்ய முடியாத அளவிலான கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர். அவர்களிடையே பயம் மற்றும் பாதுகாப்பின்மை பரவலாக ஏற்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நியாயமற்றது. இது மக்களைத் துன்புறுத்துகிறது, “என்று அவர் கூறினார்.

மேலும் “பொருளாதாரம் வீழ்ச்சியில் இருக்கும் இந்நேரத்தில் இத்தகைய விலை உயர்வை ஏன் அரசாங்கம் கருத்தில் கொள்கிறது என்பதில் எந்த தர்க்கமும் இல்லை. கொரோனா தொற்று பரவலால் மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வேலைகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்து தவித்து வருகின்றனர். இதனால் பெரிய மற்றும் சிறிய வணிகங்கள் அழிந்து வருகிறது. கொரோனா தொற்று நடுத்தர வர்க்கத்தின் வருமானத்தை வேகமாக அரித்து வருகிறது. விவசாயிகள் விவசாயம் செய்ய போராடி வருகின்றனர்” என்று கூறியுள்ளார்.