பா.ஜ.க.வின் வேளாண் சட்டங்களை மறுக்க சட்டங்களை உருவாக்குங்க.. காங்கிரஸ் முதல்வர்களுக்கு சோனியா உத்தரவு

பா.ஜ.க.வின் வேளாண் சட்டங்களை மறுக்க சட்டங்களை உருவாக்குங்க.. காங்கிரஸ் முதல்வர்களுக்கு சோனியா உத்தரவு

பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை செயல்படுத்துவதை மறுக்க சட்டங்களை உருவாக்குங்க என காங்கிஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களை அந்த கட்சியின் தலைவர் சோனியா காந்தி கேட்டுக்கொண்டார்.

காங்கிரஸ் கட்சியின் தேசிய பொது செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் ஆட்சி செய்யும் அந்நதந்த மாநிலங்களில் அரசியலமப்பின் 254(2)வது பிரிவின் கீழ், சட்டங்களை இயற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு காங்கிரஸ் தலைவர் அறிவுறுத்தியுள்ளார், இது அரசியலமைப்பின் கீழ் மாநிலத்தின் அதிகார வரம்பை ஆக்கிரமித்துள்ள விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் சட்டங்களை மறுக்க மாநில சட்டமன்றங்களை ஒரு சட்டத்தை நிறைவேற்ற அனுமதிக்கிறது.

பா.ஜ.க.வின் வேளாண் சட்டங்களை மறுக்க சட்டங்களை உருவாக்குங்க.. காங்கிரஸ் முதல்வர்களுக்கு சோனியா உத்தரவு
சோனியா காந்தி

குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒழித்தல் மற்றும் ஏ.பி.எம்.சி.களை சீர்குலைக்கும் உள்ளிட்ட விவசாயிகளுக்கு எதிரான விதிகளை கொண்ட கடுமையான வேளாண் சட்டங்களை காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் புறக்கணிக்க இது உதவும். மோடி அரசு மற்றும் பா.ஜ.க. செய்துள்ள கடுமையான அநீதியிலிருந்து விவசாயிகளை பாதுகாக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க.வின் வேளாண் சட்டங்களை மறுக்க சட்டங்களை உருவாக்குங்க.. காங்கிரஸ் முதல்வர்களுக்கு சோனியா உத்தரவு
குடியரசு தலைவர் ராம்நாத கோவிந்த்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அண்மையில் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விவசாயிகள் உற்பத்தி மற்றும் வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா, விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் மசோதா மீதான விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்தம், அத்தியாவசிய விளைபொருட்கள் (திருத்த) மசோதாகளை நிறைவேற்றியது. இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என குடியரசு தலைவருக்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து அந்த மசோதாக்கள் சட்டங்களாக மாறின.