‘போலி கையெழுத்து’ அப்பா பெயரில் ரூ.2.5 கோடி கடன் வாங்கி மோசடி செய்த மகன்!

 

‘போலி கையெழுத்து’ அப்பா பெயரில் ரூ.2.5 கோடி கடன் வாங்கி மோசடி செய்த மகன்!

மகாராஷ்டிரா அருகே மகன் போலி கையெழுத்தை போட்டு ரூ.2.5 கோடி அளவில் மோசடி செய்திருப்பதாக மகன் புகார் அளித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் போரிவலி பகுதியில் இருக்கும் ஒரு வணிக வளாகத்தின் ஹஸ்திமல் ஜெயின் என்பவர் 3 கடைகள் வைத்திருக்கிறார். இவரது மகன் பிரமோத், கடையை கவனித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் பிரமோத், ஹஸ்திமலின் பெயரில் கடன் வாங்கி இருப்பது அவருக்கு தெரிய வந்துள்ளது. இது குறித்து பிரமோத்திடம் அவர் கேட்ட போது, கடையில் இழப்பு ஏற்பட்டதாகவும் அதனை சரி செய்ய ரூ.2.5 கோடி கடன் வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

‘போலி கையெழுத்து’ அப்பா பெயரில் ரூ.2.5 கோடி கடன் வாங்கி மோசடி செய்த மகன்!

இதையடுத்து பிரமோத் தனது பெயரில் வாங்கிய கடன் ஆவணங்களை ஹஸ்திமல் ஆய்வு செய்த போது, போலியான கையெழுத்தை போட்டு கடன் வாங்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், கடன் வாங்கிய போது ஹஸ்திமல் ராஜஸ்தான் சென்றிருந்தது தெரிய வந்துள்ளது.

பின்னர், பிரமோத் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவின் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.