கோவையில் மேலும் சில கட்டுப்பாடுகள்…இன்று முதல் அமலுக்கு வந்தது!

 

கோவையில் மேலும் சில கட்டுப்பாடுகள்…இன்று முதல் அமலுக்கு வந்தது!

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தின் முடிவில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதிகரித்துவரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள சில கட்டுப்பாடுகளுடன் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மளிகை கடைகள், காய்கறி கடைகள் மற்றும் டீ கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் அனுமதி.

கோவையில் மேலும் சில கட்டுப்பாடுகள்…இன்று முதல் அமலுக்கு வந்தது!

மீன் மற்றும் இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதி.

கோயமுத்தூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்கள் மற்றும் அருங்காட்சியகங்களில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

கோவையில் மேலும் சில கட்டுப்பாடுகள்…இன்று முதல் அமலுக்கு வந்தது!

அனைத்து பூங்காக்களும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் பொதுமக்கள் வருகைக்கு தடை விதிக்கப்படுகிறது

அனைத்து மால்கள் மற்றும் வணிக வளாகங்கள் ஞாயிற்றுக்கிழமை இறங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது பொள்ளாச்சி மாட்டு சந்தை நாளை முதல் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது