இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் சென்னை, மதுரையில் தெரிய வாய்ப்பு- ஆய்வாளர்கள்

 

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் சென்னை, மதுரையில் தெரிய வாய்ப்பு- ஆய்வாளர்கள்

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஜூன் 21ம் தேதி நிகழ இருக்கிறது. சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஒரு நேர் கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் நிகழ்கிறது. இந்த நிகழ்வின் போது சந்திரன் சூரியனின் கதிர்களை பூமியில் அடைவதைத் தடுக்கிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி 16 நிமிடங்களுக்கு கிரகணம் தொடங்கி பிற்பகல் 3 மணி நான்கு நிமிடங்களுக்கு நிறைவடையும். இந்த சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க வேண்டாம் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உரிய பில்டர் கண்ணாடி அணிந்து பார்க்கலாம் என்றும், வெல்டிங் கண்ணாடி பயன்படுத்தி பார்க்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நாளை இந்தியாவில் வளைய வடிவ சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இந்தியாவின் வட பகுதிகளான பஞ்சாப், உத்ரகாண்ட், ஹரியானா பகுதி மக்கள் சூரிய கிரகணத்தை முழுமையாக பார்க்க முடியும் நிலையில், தமிழகத்தில் பகுதி சூரிய கிரகணமாகவே தெரியும்.

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் சென்னை, மதுரையில் தெரிய வாய்ப்பு- ஆய்வாளர்கள்

டெல்லியில் 94 சதவிதமும், பாட்னாவில் 78 சதவிதமும் தெரியும் என கூறப்பட்டுள்ளது. சென்னையைப் பொருத்தவரையில் 34 சதவீத அளவுக்கே சூரிய கிரகணம் தெரிய வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் மதுரையில் சூரிய கிரகணத்தை பொறுத்தவரை 26.2 சதவீதம் மட்டுமே தெரியும் எனவும், காலை 10.15 முதல் மதியம் 1.30 வரை இந்த சூரிய கிரகணத்தை பார்க்கலாம் எனவும் கலிலியோ அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.