சூரிய கிரகணம் 2020: அடுத்த வான்வெளி அற்புத நிகழ்வை காண தயாராகுங்கள்!

 

சூரிய கிரகணம் 2020: அடுத்த வான்வெளி அற்புத நிகழ்வை காண தயாராகுங்கள்!

டெல்லி: இந்தாண்டு ஜூன் 21-ஆம் தேதி சூரிய கிரகண நிகழ்வு நடைபெற உள்ளது.

2020-ஆம் ஆண்டு வானியல் ஆர்வலர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான ஆண்டாக அமைந்துள்ளது. இந்தாண்டு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் காணக் கூடிய 6 கிரகணங்கள் நிகழ உள்ளது. அதில் ஏற்கனவே இரண்டு சந்திர கிரகண நிகழ்வுகள் நிகழ்ந்து விட்டன. அவற்றில் ஒரு கிரகண நிகழ்வை இந்தியாவிலிருந்து பார்க்க முடிந்தது. ஜனவரி 10 மற்றும் ஜூன் 5 ஆகிய தேதிகளில் இந்த சந்திர கிரகணங்கள் ஏற்பட்டன.

சூரிய கிரகணம் 2020: அடுத்த வான்வெளி அற்புத நிகழ்வை காண தயாராகுங்கள்!

இந்த நிலையில் வருகிற ஜூன் 21 அன்று இந்தாண்டின் முதல் சூரிய கிரகணத்தை பார்க்க உள்ளோம். இந்த சூரிய கிரகணத்தை ஆப்பிரிக்கா, மத்திய ஆப்பிரிக்க குடியரசு, காங்கோ, எத்தியோப்பியா, பாகிஸ்தான், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் உள்ளவர்களால் பார்க்க முடியும். அன்று காலை 9:15 முதல் மாலை 3:04 வரை என மொத்தம் 6 மணி நேரம் இந்த சூரிய கிரகணம் நிகழ உள்ளது.