Home லைப்ஸ்டைல் ஆரோக்கியம் ரத்த அழுத்தம் குறைக்கும், புற்றுநோய் தடுக்கும் சூரியக் குளியல்!

ரத்த அழுத்தம் குறைக்கும், புற்றுநோய் தடுக்கும் சூரியக் குளியல்!

சூரியக் குளியல்… மனிதனின் பல்வேறு உடல்நலக்கோளாறுகளைத் தீர்க்கும் இந்த சூரியக்குளியல் முற்றிலும் இலவசமானது. மூளை செயல்பாட்டினை அதிகரிப்பதில் தொடங்கி ரத்த அழுத்தத்தைக் குறைப்பது, புற்றுநோய் ஆபத்தைக் குறைப்பது என பல்வேறுவிதமாக மனிதனுக்கு நலம் தரக்கூடியது சூரியக் குளியல்.

ரத்த அழுத்தம் குறைக்கும், புற்றுநோய் தடுக்கும் சூரியக் குளியல்!

ரத்த அழுத்தம் குறைக்கும், புற்றுநோய் தடுக்கும் சூரியக் குளியல்!
வைட்டமின் சத்து:
வைட்டமின் டி கிடைப்பதற்கு மிகப்பெரிய ஆதாரமாக விளங்கும் சூரியக் குளியலை சூரிய உதயத்தின்போதும் சூரியன் மறையும் நேரத்திலும்தான் எடுக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக உள்ளது. ஆனால், காலை 11 மணி முதல் நண்பகல் ஒரு மணிக்குள் எடுப்பதுதான் சரி என்று சொல்லப்படுகிறது.

சூரியக் குளியல் என்றதும் மணிக்கணக்கில் எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. 10 முதல் 20 நிமிடங்கள் வரை எடுத்தாலே போதுமானது. அதேநேரத்தில் சூரியக் குளியல் எடுக்க இந்த இடம்தான் தேவை என்றில்லை; எங்கு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். வெளிநாட்டினர் கடற்கரைகளில் சூரியக் குளியல் எடுப்பதுபோல எடுக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

ரத்த அழுத்தம் குறைக்கும், புற்றுநோய் தடுக்கும் சூரியக் குளியல்!
தண்ணீர்:
சூரியக் குளியல் எடுத்துக் கொள்வதற்கு முன்பும், குளியலுக்குப் பிறகும் 100 முதல் 200 மில்லி தண்ணீர் குடித்தால் நல்லது. தலையை மெல்லிய துணியால் மூடிக்கொள்ளலாம் அல்லது ஈரத்துணியைக் கட்டிக்கொள்ளலாம். இப்படிச் செய்வதன்மூலம் நீரிழப்பு தடுக்கப்படும். உடலில் மென்மையான ஆடைகள் அணிய வேண்டும்.

வெயில் என்றாலே நம்மில் பலருக்கு வெறுப்பு ஏற்படும். சூரிய ஒளியிலிருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்களால் பாதிப்புகள் உண்டாகும் என்பதை ஒரு காரணமாக பெரியவர்கள் பலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், சூரியக் குளியலால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன என்பது பலருக்குத் தெரியவில்லை.

சின்ட்ரோம்:
பெருகி வரும் நாகரிகம் மற்றும் அப்பார்ட்மென்ட் வீடுகளால் பலரது உடல் சூரிய ஒளியில் படுவதில்லை. இதனால் பல்வேறுவிதமான தோல் நோய்களுக்கு ஆளாகின்றனர். சூரிய ஒளி படாததால் அப்பார்ட்மென்ட் சின்ட்ரோம் என்ற புதுவிதமான நோய்க்கு ஆளாவதாகக் கூறப்படுகிறது. இவற்றைக் கருத்தில்கொண்டு தினமும் நம் உடலில் சூரிய ஒளி படுமாறு சில நிமிடங்களாவது நிற்க வேண்டும்.

சூரியக் குளியலால் ரத்த அழுத்தம் குறையும், இரவில் நிம்மதியான உறக்கம் வரும். மூளையின் செயல்பாடு அதிகரிப்பதுடன் முதுமையில் வரும் அல்சைமர் நோய் வராமல் தடுக்கப்படும். தோலில் வரும் குறைபாடுகள் குணமாவதுடன் புற்றுநோய் வரும் ஆபத்து வெகுவாகக் குறைகிறது. குழந்தைகள் வளர்ச்சிக்கு உதவுவதுடன் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் உதவும்.

ரத்த அழுத்தம் குறைக்கும், புற்றுநோய் தடுக்கும் சூரியக் குளியல்!
சர்க்கரை நோய்:
சூரியக் குளியலால் மனநிலை மேம்படும், கண் ஆரோக்கியம் பெறும், எலும்புகள் வலுப்பெறும். டைப் 2 வகை சர்க்கரை நோய் வருவதற்கான ஆபத்து குறையும், உடல் பருமன் ஏற்படாமல் தடுக்கப்படும். மன அழுத்தம் ஏற்படாமல் தவிர்க்க உதவும், பருவ காலங்களில் வரக்கூடிய பாதிப்புகளை எதிர்த்துப் போராடும்.

இத்தனை நன்மைகள் இருந்தாலும் சூரிய ஒளி நம் உடலில் படுவதால் நிறைய உடல்நலக் குறைபாடுகள் ஏற்படுவதாக பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஆனால், உண்மையில் சூரியக் குளியலால் நன்மைகளே கிடைக்கும்.

 

 

ரத்த அழுத்தம் குறைக்கும், புற்றுநோய் தடுக்கும் சூரியக் குளியல்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

மகாராஷ்டிராவை சூறையாடும் கனமழை; 136 பேர் மரணம்!

மகாராஷ்டிராவில் ஏற்பட்ட மழை பாதிப்புகளால் நேற்று மாலை வரை 136 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது....

தமிழ்நாட்டில் நூலகங்கள் திறக்க தமிழக அரசு உத்தரவு!

போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள பொது நூலகங்கள் இன்று முதல் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

கணவனை ஏமாற்றிவிட்டு… புதுமணப்பெண்ணை கடத்திய தோழி!

ஆம்பூர் அருகே திருமணமாகி இரண்டே மாதங்கள் ஆன புதுமணப்பெண் அவரது தோழியால் கொல்கொத்தா அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி மலை கிராமத்தில்...

ஒரேநாளில் 546 பேர் உயிரிழப்பு…தினசரி அதிகரிக்கும் கொரோனா தொற்று!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை மொத்தம் 3,13,32,159 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- Advertisment -
TopTamilNews