• February
    24
    Monday

Main Area

Main



தனுஷ்கோடியில் மீண்டும் ரயில் சேவைக்காக மண் பரிசோதனை.!

தனுஷ்கோடி
தனுஷ்கோடி

1964 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 நாட்கள்  தனுஷ்கோடியில் புயல் பாதிப்பு ஏற்பட்டது. மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையைக் கடந்த போது ராட்சத அலைகள் வந்து தனுஷ்கோடியையே சீர்குலைத்தது. இந்த பேரழிவால் சுமார் 1800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தற்போது, அங்கு சில மீனவ மக்களே வசித்து வருகின்றனர். இந்த பேரழிவையடுத்து, ராமேஸ்வரம்- தனுஷ்கோடி இடையே இருந்த ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. 

Dhanush kodi

54 ஆண்டுகளுக்குப் பிறகு  அழிந்து போனயை மீண்டும் புதுப்பிக்க முடிவு செய்து ராமேஸ்வரம்- தனுஷ்கோடி இடையே 17 கிலோ மீட்டர் ரயில் பாதை  அமைக்க சுமார் ரூ.203 கோடி நிதியும், பாம்பனில் ரயில் சேவைக்காக புதிய பாலம் அமைக்க ரூ.250 கோடி நிதியும் மத்திய அரசு ஒதுக்கியது.

 

இந்த மாபெரும் நிகழ்வைக் கடந்த மார்ச், 1 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டித் துவக்கி வைத்தார். அதனையடுத்து, இன்று ரயில் சேவை துவங்குதற்காகத் தனுஷ்கோடியில் உள்ள 20 இடங்களில் மத்திய அரசு மண் பரிசோதனையைச் செய்து வருகிறது.

2018 TopTamilNews. All rights reserved.