சமூக ஊடகத்தில் சந்தித்த காதலன் தன்னை கல்யாணம் செய்து கொள்வதாக ஏமாற்றி ,எட்டு மாதமாக பலாத்காரம் செய்ததாக ஒரு பெண் புகார் கூறியுள்ளார்.
![Woman raped by social media friend [Representative image]](https://imgk.timesnownews.com/story/iStock-187550172_1_0.jpg?tr=w-600,h-450,fo-auto)
மத்திய பிரதேசத்தின் போபாலில் வசிக்கும் 25 வயதான ஒரு பெண் சமூக ஊடகத்தில் 26 வயதான ஒரு வாலிபரை கடந்த மூன்றாண்டுக்கு முன்பு சந்தித்தார் .நட்போடு தொடங்கிய அவர்களின் சந்திப்பு நாளடைவில் காதலாக மாறியது .அதன் பின்னர் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலர்களாக இருந்து வந்தார்கள் .அதன் பிறகு அவர்களின் காதல் கடந்த எட்டு மாதங்களாக பாலியல் உறவாக மாறியது .அப்போதெல்லாம் அந்த காதலன் அந்த பெண்ணிடம் தான் விரைவில் அவரை கல்யாணம் செய்து கொள்வதாக கூறி உறவு கொண்டுள்ளார் .
அதன் பிறகு அந்த பெண்ணும் அவரின் ஆசை வார்த்தையில் மயங்கி அவருக்கு தன்னையே கொடுத்தார் ,அதன் பிறகு அந்த காதலன் அவரை பலமுரை கெடுத்தார் .இந்நிலையில் கடந்த மாதம் திடீரென அந்த காதலன் அவரை விட்டு விலக ஆரம்பித்தார் .அந்த பெண் போன் செய்தாலும் எடுக்கவில்லை .அந்த பெண் ஊடகத்தில் வந்தாலும் அவரோடு சாட் செய்வதில்லை .இதனால் அந்த பெண் மிகவும் மன வேதனையை அனுபவித்தார்.அதன் பிறகு ஜூலை 2020 ல் அந்த காதலன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதை கண்டு பிடித்தார் .அதனால் தன்னை கல்யாணம் செய்து கொள்வதாக ஏமாற்றி தன்னுடைய கற்பை சூறையாடிய காதலனை பழிவாங்க நினைத்தார் .அதனால் அங்குள்ள காவல் நிலையத்துக்கு சென்றார் .அங்கு அந்த காதலன் மீது பாலியல் புகார் கூறினார் .போலீசார் அந்த பெண்ணின் புகாரின் அடிப்படையில் அவரின் காதலன் மீது பாலியல் வழக்கு மற்றும் ஏமாற்றுதல் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தார்கள் .
