மத்திய அமைச்சரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் காற்றில் பறந்த சமூக விலகல் விதிமுறைகள்…காங்கிரஸ் குற்றச்சாட்டு

மத்திய அமைச்சரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் காற்றில் பறந்த சமூக விலகல் விதிமுறைகள்…காங்கிரஸ் குற்றச்சாட்டு

பா.ஜ.க.வை சேர்ந்தவரும், மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சருமான நரேந்திர சிங் தோமருக்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 12) 63வது பிறந்தநாள். மத்திய பிரதேசத்தில் இந்தூரில் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் பிறந்தநாளை முன்னிட்டு விழா ஒன்றை பா.ஜ.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ. சுதர்ஷன் குப்தா விழா ஒன்றை ஏற்பாடு செய்தார். அதில் நரேந்திர சிங் தோமர் கலந்து கொள்ளவில்லை. அந்த விழாவில் சுமார் 2 ஆயிரம் குடும்பங்களுக்கு உணவு தானியங்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது.

மத்திய அமைச்சரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் காற்றில் பறந்த சமூக விலகல் விதிமுறைகள்…காங்கிரஸ் குற்றச்சாட்டு

உணவு தானியங்கள் விநியோகம் செய்து கொண்டிருந்தபோது திடீரென குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது. மக்கள் முண்டியடித்து கொண்டு பொருட்களை விநியோகம் செய்பவர்களிடமிருந்து பறித்து கொண்டு சென்றனர். அந்த நிகழ்ச்சியில் சமூக விலக விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மக்கள் உணவு பொருட்களை விநியோகம் செய்பவர்களிடமிருந்து பறித்து கொண்டு ஒடி வருவதையும், ரேஷனை திருடு என சிலர் சொல்வதும் கேட்கிறது.

மத்திய அமைச்சரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் காற்றில் பறந்த சமூக விலகல் விதிமுறைகள்…காங்கிரஸ் குற்றச்சாட்டு

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் இந்த சூழ்நிலையில் மத்திய அமைச்சரின் பிறந்த நாள் விழாவில் சமூக விலகல் விதிமுறைகள் மதிக்காமல் செயல்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இது தொடர்பாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் கே.கே. மிஸ்ரா கூறுகையில், கொரோனா வைரஸ் காரணமாக முழு நாடும் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டும், நூற்றுக்கணக்கான இறந்த விட்ட நிலையில், பா.ஜ.க. தொண்டர்கள் எந்தவொரு தலைவரது பிறந்தநாளையும் இந்த நேரத்தில் கொண்டாடுவது சரியா? உண்மையில் அந்த நிகழ்ச்சி பா.ஜ.க.வின் உண்மை முகத்தை காட்டி விட்டது. அது மக்களை பற்றி கவலைப்படவில்லை என தெரிவித்தார்.