சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிக்குப் பின் இவ்வளவு விஷயங்களா? #CSK #IPL

 

சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிக்குப் பின் இவ்வளவு விஷயங்களா? #CSK #IPL

ஹாட்ரிக் தோல்வியால் சிஎஸ்கே ரசிகர்கள் எல்லாம் நேற்றைய போட்டியின்போது ட்விட்டரில் அடக்கி வாசித்தனர். ஆனால், அவர்களுக்கு மெகா கொண்டாட்டத்தைத் தந்தனர் வாட்சனும் டூ பிளஸியும்.

சென்னை Vs பஞ்சாப் போட்டியில் டாஸ் வின் பண்ணிய பஞ்சாப் டீம் கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஓப்பனிங்கில் அவரும் மயங் அகர்வாலும் பின் வரிசையில் ராகுல் திவெட்டியா போன்ற அதிரடி வீரர்கள் இருப்பதால் ஸ்கோரை 200 + கொண்டு வர திட்டமிட்டிருக்கலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிக்குப் பின் இவ்வளவு விஷயங்களா? #CSK #IPL

ஆனால், சென்னை டீம் ஆறு பவுலர்களை வைத்து மிரட்டியது. சாம் கரண் ரன் அதிகம் கொடுக்க, மூன்று ஓவரோடு நிறுத்தப்பட்டார். பிராவோ, ஜடேஜா, தாக்கூர் ஓரளவு ரன்களைக் கட்டுப்படுத்தினர்.

இருந்தபோதிலும் கேப்டன் ராகுல் 63, மயங் 26, பூரண் 33 என அணியின் ஸ்கோர்178 யைத் தொட்டது. துபாய் மைதானத்தில் இது நல்ல ஸ்கோர்தான்.

சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிக்குப் பின் இவ்வளவு விஷயங்களா? #CSK #IPL

அடுத்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் டீமில் ஓப்பனிங் வாட்சனும் டூ பிளஸியும் இறக்கப்பட்டனர். சென்ற போட்டியில் இந்த ஜோடி சோபிக்க வில்லை என்பதால், பெரிய எதிர்பார்ப்பு இல்லை. அதிலும் வாட்சன் சுத்தமாக ஃபார்மில் இல்லாததால் முதல் விக்கெட் வாட்சன் என்றுதான் ரசிகர்கள் நினைத்தார்கள். ஆனால், நடந்ததோ வேறு.

சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிக்குப் பின் இவ்வளவு விஷயங்களா? #CSK #IPL

வாட்சன் – டூ பிளஸி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். விக்கெட்டைப் பறிக்கொடுக்காமல் அதேநேரம் ரன்ரேட் 10 யை ஒட்டியவாறே ஆடினார். பஞ்சாப் பவுலர்களின் முயற்சிகள் பலிக்க வில்லை.

இறுதியாக வாட்சன் – டூ பிளஸி தலா 53 பந்துகளைப் பிடித்து 181 ரன்கள் விளாசி 10 விக்கெட் வித்தியாசத்தில் (14 பந்துகள் மிச்சமிருக்கும் நிலையில்) வெற்றியைத் தட்டி வந்தார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிக்குப் பின் இவ்வளவு விஷயங்களா? #CSK #IPL

ஹாட்ரிக் தோல்விக்குப் பிறகு கிடைத்த இந்த வெற்றி ரசிகர்களை மட்டுமல்ல, ஆடும் வீரர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்த வெற்றிக்குப் பின் பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடந்திருக்கின்றன.

நேற்றைய போட்டியில்தான் விக்கெட் கீப்பராக தோனி 100 கேட்ச் பிடித்து சாதனைப் பட்டியலில் இடம்பிடித்தார். இவருக்கு முன் தினேஷ் கார்த்திக் இருக்கிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிக்குப் பின் இவ்வளவு விஷயங்களா? #CSK #IPL

வெற்றியைப் பற்றி தோனி சொல்லும்போது, ‘எதிரணியை நிறைய ரன்களை அடிக்க விட்டுக்கொடுத்ததே எங்களின் தொடர் தோல்விக்குக் காரணமாயிற்று’ என்றார். உண்மைதான். ராஜஸ்தான் அணியை 216 ரன்களையும் டெல்லியை 175 ரன்களையும் ஹைதராபாத் அணியை 164 ரன்களையும் அடிக்க விட்டு விட்டார்கள். ஆனாலும் நேற்று 178, மும்பையோடு 162 ஆகிய ஸ்கோரையும் அடித்து வென்ற டீம்தானே சென்னை சூப்பர் கிங்ஸ்.

சென்னை அணிக்கு ஓப்பனிங் சரியில்லை என்ற விமர்சனம் நேற்று அடித்து நொருக்கப்பட்டது. சென்ற மேட்சில்கூட வாட்சனோடு ஏன் டூ பிளஸியை இறக்க வேண்டும். ராயுடுவை இறக்கலாமே… அல்லது ராயுடுவும் டூ பிளஸியும் இறங்கலாமே என்று விமர்சனம் செய்யப்பட்டது. ஆனால், அதற்குப் பதிலாக தோனி, “ நான் மட்டும்மல்ல பயிற்சியாளரும் வாட்சன் மீது நம்பிக்கையோடு இருந்தார். வாட்சனும் வலைப்பயிற்சியில் நன்றாகவும் ஆடினார்” என்று கூறியுள்ளார். வலை பயிற்சி ஆட்டம் நேற்று மைதானத்திலும் எதிரொலித்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிக்குப் பின் இவ்வளவு விஷயங்களா? #CSK #IPL

கேட்ச் மிஸ் பண்ணியதற்கு ரொம்பவே வருத்தப்பட்டு பேசியிருந்தார் கேப்டன் தோனி. ‘நாம் நன்றாக ஆடாத நேரத்தில் நிச்சயம் கேட்ச் பிடித்தே ஆக வேண்டும்’ என்றுள்ளார். டிரஸிங்க் ரூமில் சில வீரர்களோடு கோபத்தோடு பேசினாராம் தோனி. அப்போது நாக் அவுட் என்றால் எப்படி ஆடுவீர்களோ அப்படி ஆடுங்கள் என்றாராம் முடிவாக.

நேற்று வாட்சனும் டூ பிளஸியும் அப்படித்தான் ஆடினார்கள். ‘இந்த வெற்றிக்கு இந்த இருவருமே காரணம். அவர்கள் அதிரடியாக ஆடாமல் தங்கள் அனுபவத்தை ஆட்டத்தில் வெளிப்படுத்தினார்கள்’ என்றும் கூறியிருக்கிறார் தோனி.

சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிக்குப் பின் இவ்வளவு விஷயங்களா? #CSK #IPL

வாட்சனைப் போலவே கேதர் ஜாதவும் விரைவில் ஃபார்ம்க்குத் திரும்புவார் என்று நம்புவோம். யார் கண்ணும் படாமல் சென்னை சூப்பர் கிங்ஸின் அதிரடி வெற்றி தொடர்ந்து கிடைக்கட்டும்.