• March
    31
    Tuesday

Main Area

Main



மிளகாயில் இவ்வளவு நன்மைகளா?! அடடே இது தெரியாம போச்செ இவ்வளவு நாள்!

மிளகா
மிளகா

சாப்பாட்டில் மிளகாய் இருந்தால் அதை தூக்கிப் போட்டுவிட்டு சாப்பிடுபவர்களே அதிகம் .ஏன் மிளகாயை சாப்பிடவில்லை என்று கேட்டால் காரம் அதிகமா இருக்கும்,சாப்பிட்டால் வயிறு கபகபன்னு எரியும் அதற்கு விளக்கமும் கொடுப்பார்கள்.உண்மையில் நீங்கள் தூக்கி எறியும் மிளகாயில் எவ்வளவு நன்மைகள் அடங்கியிருக்கு என்று தெரியுமா… முழுசா படியுங்க ;ஆச்சர்யப்படுவீங்க.

chilli

ஆராய்ச்சியாளர்கள் மிளகாய் சாப்பிடுபவர்களுக்கு மரணத்தை வரவழைக்கும் ஆபத்தான இதய நோய்கள் வரும் வாய்ப்புகள் குறைவு என கூறியுள்ளனர். வாரத்திற்கு நான்கு முறைக்கு மேல் காரமாண மிளகாய் பழத்தை உண்டவர்களுக்கு மாரடைப்பினால் இறப்பவர்களின் எண்ணிக்கையில் 40% குறைவாக உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், மிளகாயை சாப்பிடுவர்களுடன் மிளகாய் சாப்பிடாதவர்களை  ஒப்பிட்டு பார்த்தில் மிளகாய் சாப்பிடுபவர்களுக்கு 23%  இறப்பின் அனைத்து காரணங்களும் குறைவாகவே காணப்பட்டுள்ளன என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

chilli

ஒரு ஆய்வு "ஜர்னல் ஆப் தி அமெரிக்கன் காலேஜ் ஆப் கார்டியோலஜி" யில் சொல்லப்படும் செய்தி  என்னவெனில், இத்தாலியில் 22,811 மக்களை 8 வருடங்களாக தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்தியதில், மக்கள் தாங்கள் இறப்பதற்கு முக்கிய காரணி அவர்கள் உண்ணும் உணவு முறைகளே, மேலும் ஒரு சிலர் மெடிட்டெரேனியன் உணவுகளையும், வேறு சிலர் ஆரோக்கியமில்லாத உணவுகளையும் சாப்பிடகூடும்  ஆனால் அதில் அனைத்திலும், மிளகாய் ஒரு பாதுகாப்பு காரணியாக உள்ளது" என்கிறது அந்த ஆய்வின் முடிவு.

logo


மேலும், டயடீசியன் டுயனே மேலோர் கூறியதாவது,"இந்த கண்டுபிடிப்புகள் அனைத்துமே சுவாரஸ்யமானதாக இருப்பினும் இவை ஒரு இணைப்பை காட்டவில்லை, மேலும் இவர்கள் பாரம்பரிய மெடிட்டரேனியன் உணவு வகைகளை சாப்பிடுபவர்களை  காட்டிலும் இந்தவகை உணவுவை சாப்பிடுபவர்கள் அதிகம் பயனடைகிறார்கள். நாம் நம் உணவில் தினமும் சேர்க்கும் மிளகாய் உணவினை ருசியாக்குவதுடன் உடலுக்கும் நன்மை பயக்குகிறது. அதிகம் தீர்க்கமாக பேசுபவர்களே உணவில் அதிகம் மூலிகைகள், வாசனை பொருட்கள், பழங்கள் காய் கறிகள் பயன்படுத்துகிறார்கள் எனவும் ஆய்வு தெரிவித்துள்ளது"

capsiv

சுகாதாரம் மற்றும் பொது ஆரோக்கியத்தின் பேராசிரியர் லிஸியா லகோவியெல்லோ கூறியதாவது,"அமெரிக்கா மற்றும் சீனா அதிகளவில் குடைமிளகாய் மற்றும் மிளகாயின்  இதர வைகையை உணவில் அதிகம் பயன்படுத்துவதால்தான்  ஆரோக்கியமாகவும் அதிக வயதுவரை வாழ்கிறார்கள்.

இனிமே மிளகாயை ஒதுக்கி வைக்காதீர்கள்!

2018 TopTamilNews. All rights reserved.