இந்தியாவில் இதுவரை 95,527 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டனர் – சுகாதார அமைச்சகம் அறிவிப்பு

 

இந்தியாவில் இதுவரை 95,527 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டனர் – சுகாதார அமைச்சகம் அறிவிப்பு

டெல்லி: இந்தியாவில் இதுவரை 95,527 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை ஒரு லட்சத்து 98 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடைசி 24 மணி நேரத்தில் நாட்டில் 8171 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அடுத்த 24 மணி நேரத்தில் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை கடந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் இதுவரை 95,527 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஜூன் 1, 2020 நிலவரப்படி அரசுத் துறையில் 476 மற்றும் தனியார் துறையில் 205 என மொத்தம் 681 ஆய்வகங்கள் நாட்டில் உள்ளன. ஒவ்வொரு நாளும் 1 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனைகளை நடத்தி வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விஞ்ஞானி நிவேதிதா குப்தா கூறியுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் 3,708 கொரோனா நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.