’சாக்லெட்டில் மறைத்தெல்லாமா தங்கம் கடத்துவீங்க?’ அதிகாரிகள் அதிர்ச்சி

 

’சாக்லெட்டில் மறைத்தெல்லாமா தங்கம் கடத்துவீங்க?’ அதிகாரிகள் அதிர்ச்சி

தங்கம் கடத்தல் செய்தி வராத நாளே இல்லை என்றளவுக்கு அதிகரித்து விட்டன தங்கக் கடத்தல் குற்றங்கள். அதிலும் விமானங்கள் வழியே நூதன முறையில் தங்கம் கடத்துவது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இந்த லாக்டெளன் காலத்தில் விமானப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டாலும் தங்கக் கடத்தல் குறைந்த பாடில்லை.

நேற்று துபாய் டூ சென்னை வந்த எமிரேட்ஸ் விமானம் ஈகே 544 என்ற விமானத்தில் தங்கம் கடத்தப்படும் செய்தி சுங்கத்துறை அதிகாரிகளுக்குக் கிடைததது. அதனால், கண்காணிப்பு பணியைத் தீவிரப் படுத்தினர்.

’சாக்லெட்டில் மறைத்தெல்லாமா தங்கம் கடத்துவீங்க?’ அதிகாரிகள் அதிர்ச்சி

எமிரேட்ஸ் விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த பத்மா பாலாஜி (25) என்பவர் மீது விமானநிலைய சுங்கத் துறையினருக்குச் சந்தேகம் எழுந்தது. அவரை சோதனை செய்தபோது அவரது உள்ளாடையில் காட்பரீஸ் டைரி மில்க் சாக்லெட் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தார். அதனைப் பிரித்துப் பார்க்கையில் அதில் 660 கிராம் தங்கப் பசை இருந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து ரூ. 28.7 லட்சம் மதிப்பில் 546 கிராம் எடையிலான தங்கம், சுங்கச் சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்டதோடு, அவர் கைது செய்யப்பட்டார்.

நேற்று மட்டுமல்ல, அதற்கு முதன்நாள் புதன்கிழமை அன்று துபாய் டூ சென்னை வந்த ஏர் இந்தியா IX 1644 என்ற விமானத்தில் பயணம் செய்த 11 பேர் மீது விமான நிலைய சுங்கத் துறையினர் சந்தேகம் எழுந்தது. அவர்களைச் சோதனை செய்ததில் 2.53 கிலோ எடையில் 12 தங்கப் பசை அடங்கிய பொட்டலங்கள் அவர்கள் தங்கள் உடலில் மறைத்து எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ. 1.14 கோடி மதிப்பில் 2.15 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

’சாக்லெட்டில் மறைத்தெல்லாமா தங்கம் கடத்துவீங்க?’ அதிகாரிகள் அதிர்ச்சி

சார்ஜா டூ சென்னை ஏர் அரேபியா ஜி9-471 விமானத்தில் பயணித்த மூன்று பயணிகள் தங்கம் கடத்தி வருவதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் சுங்கத் துறையினர் அவர்களைச் சோதனை இடப்பட்டனர். தங்கள் உடலில் 831 கிராம் எடையிலான 5 தங்கப் பொட்டலங்களை அவர்கள் எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ. 36.40 இலட்சம் மதிப்பில் 685 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் துபாயிலிருந்து ஃபிளை துபாய் எஃப்இசட்8517 என்ற விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த ஒரு பயணியிடமிருந்து 401 கிராம் எடையில் 2 தங்கப் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ. 18.28 லட்சம் (347 கிராம் தங்கம்).

இவை அனைத்தையும் சேர்த்து பார்க்கையில் ரூ. 1.97 கோடி மதிப்பில் 3.72 கிலோ தங்கம் பிடிபட்டுள்ளது.