இனிமேல் கொரோனா உறுதியானால் எஸ்எம்எஸ் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.. புதிய சேவை தொடக்கம்!

 

இனிமேல் கொரோனா உறுதியானால் எஸ்எம்எஸ் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.. புதிய சேவை தொடக்கம்!

கொரோனா பாதிப்பு மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது. கிட்டத்தட்ட 5 மாதங்களாக வீடுகளிலேயே முடங்கி இருக்கும் மக்கள், எப்போது இந்த பாதிப்பு முடிந்து இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர். இதனிடையே கொரோனா பாதிப்பு பன்மடங்கு அதிகரித்து வருவதால் மக்களை அதிலிருந்து காக்க அரசு திணறி வருகிறது. அதனால், கொரோனாவில் இருந்து தங்களை காத்துக் கொள்ள, மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும், கொரோனா உறுதியாகும் நபர்களை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அழைத்து சென்று மருத்துவமனைகளிலோ அல்லது சிகிச்சை மையங்களிலோ அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றன.

இனிமேல் கொரோனா உறுதியானால் எஸ்எம்எஸ் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.. புதிய சேவை தொடக்கம்!

இந்த நிலையில், கொரோனா முடிவுகளை குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கும் நடைமுறையை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடக்கி வைத்தார். சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்த நடைமுறையை தொடக்கி வைத்த அவர், ராஜீவ்காந்தி மருத்துவமனை பயன்பாட்டிற்காக 2 பேட்டரி கார்களையும் வழங்கினார். அதன் பின்னர் பேசிய அமைச்சர், எம்பி வசந்தகுமாரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு தேவையான வசதிகளை வைத்திருக்க அறிவுறுத்தி இருப்பதாகவும் கூறினார். மேலும், தேவைப்பட்டால் கூட்டத்தொடருக்கு முன் எம்எல்ஏ, எம்பிக்கள் எல்லாருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும் கூறினார்